பாரத் நெட்” திட்டம் உண்மைக்கு புறம்பாக பேசி வரும் ஸ்டாலினுக்கு ஆர்.பி. உதயகுமார் விளக்கம்…


வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல்
தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு.ஆர்.பி. உதயகுமார் ஆர்.பி. உதயகுமார் ஆர்.பி. உதயகுமார் அவர்களின்
அறிக்கை.

“பாரத் நெட்” திட்டம் தமிழ்நாட்டிலுள்ள 12,524 கிராம
ஊராட்சிகளை கண்ணாடி இழை (Optical fiber) மூலம் இணைக்கும்
உன்னதமான உட்கட்டமைப்பு திட்டமாகும். இத்திட்டம் மத்திய அரசின்
முழு நிதி உதவியுடன் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ஒரு தகவல்
தொழில் நுட்பத் திட்டமாகும். அரசின் அனைத்து துறைகளின்
சேவைகளை மக்களுக்கு நேரடியாக ஒளிவு மறைவின்றி சென்று
சேர்க்கும் தகவல் தொழில் நுட்பத்தில் ஒரு முன்னோடி மாநிலமாக
தமிழ்நாடு திகழ்கிறது. பாரத் நெட் திட்டம் தமிழ்நாட்டில் ஏற்கனவே
உள்ள இணையதள வலையங்களான “தேசிய அறிவுத்திறன்
வலையமைப்பு“ (National knowledge network) “தமிழ்நாடு மாநில
பெரும் பரப்பு வலையமைப்பு” (TASWAN ) மற்றும் காவல்துறையின்
இணையதளம் (Police network) ஆகிய அனைத்து வலை
அமைப்புகளையும் ஒருங்கிணைத்து கிராமப்புற மக்களுக்கு
இணையதள சேவைகளை வழங்கி சமூகப் பொருளாதார ரீதியில்
அவர்களை மேம்படுத்த இத்திட்டம் இணைப்பு பாலமாக அமையும்
வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு
நிறுவனம் (TANFINET ) டிசம்பர் 5, 2019 அன்று வலைதளம் மூலமாக
ஒப்பந்தப்புள்ளி கோரியது. அதன் பின்பு ஒப்பந்தப் புள்ளிக்கான
முன்னோடி கூட்டம் (pre- bid) 21.2.2020 அன்று

நடத்தப்பட்டது. உத்தேச ஒப்பந்ததாரர்களின் சந்தேகங்கள்
மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டது. அந்த சந்தேகங்களை ஆய்வு செய்து,
பிழை திருத்த பட்டியல் (Corrigendum) 15.4.2020 அன்று அரசு வலை
தளம் (Government e-tender Portal ) மூலம் வெளியிடப்பட்டது.
இதனிடையில், மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறை
இத்திட்டத்தை 31.3.2021-க்குள் தமிழ்நாட்டில் முழுமையாக நிறைவேற்ற
வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்துள்ளது. கிராமப்புற மக்களுக்கு
இணையதள சேவைகளைக் கொண்டு சேர்க்க இத்திட்டத்தினை
குறித்த காலத்திற்குள் நிறைவேற்றுவது மாநில அரசுக்கு
இன்றியமையாதது ஆகும்.
ஒப்பந்தப் புள்ளிகளை இறுதி செய்து ஒப்பந்ததாரர்களை தேர்வு
செய்யும் பணி நடைபெற்ற வேளையில், எதிர்பாராதவிதமாக இந்தியா
முழுமைக்கும் கொரோனா நோய் தடுப்பிற்கான ஊரடங்கு உத்தரவு
அமலுக்கு வந்து இன்று வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அமலில்
உள்ளது.
பாரத் நெட் திட்டம், இயற்கை பேரிடர் காலங்களில் கூட
கிராமங்களுக்கு இடையேயான தகவல் தொடர்பினை உறுதி செய்யும்
வகையில் திறம்பட செயல்படுத்தப்படும். தற்போது ஒன்றிய அளவில்
மட்டுமே தமிழ்நாட்டில் தகவல் தொடர்பு உட்கட்டமைப்புகள் உள்ளன.
இதனால் இயற்கை பேரிடர் காலங்களில், பேரிடர் மேலாண்மை சட்டம்,
2005-ல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை
கிராமப்புறங்களில் மேற்கொள்வதில் பல்வேறு இடர்பாடுகளைச்
சந்திக்க வேண்டியுள்ளது.

சிறந்த தகவல் தொடர்பு கட்டமைப்புகள் இருந்தால் மட்டுமே
கோவிட்-19 போன்ற பேரிடர் காலங்களில் சிறப்பான தகவல்
தொடர்பினை மேற்கொள்ள முடியும். தகவல் தொடர்பு கட்டமைப்புகளை
மேம்படுத்த வேண்டும் என்றால் பாரத் நெட் திட்டத்தினை மத்திய அரசு
நிர்ணயித்த 9 மாத காலத்திற்குள் நிறைவேற்றினால் மட்டுமே இனி
வரும் காலங்களில் பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை விரைந்து
செயல்படுத்த முடியும். சுகாதாரம், விவசாயம், கல்வி, சமூகநலம்,
பொது விநியோகத் திட்டம் மற்றும் காவல்துறை சார்ந்த தமிழ்நாட்டு
மக்களுக்கு வழங்குகின்ற இன்றியமையாத சேவைகளை தனியார்
துறைகள் மூலம் மட்டுமே செயல்படுத்த முடியாது. எனவே
கிராமப்புறங்களில், மக்களுக்கான இன்றியமையாத சேவைகளை
வழங்க தேவையான உட்கட்டமைப்புகளை அரசே உருவாக்க
வேண்டும்.
மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில், தமிழ்நாடு ஒளிவு
மறைவற்ற ஒப்பந்தப் புள்ளிகள் சட்டத்தின்படியும், இது போன்ற ஒத்தத்
தன்மையுள்ள நேர்வுகளில் உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட
வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையிலும், டிசம்பர்
2019ல் கோரப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளியில் சில வரையறைகளை
திருத்தங்கள் செய்து, இத்திட்டத்தில் ஏற்கனவே முன் அனுபவம்
மற்றும் பொருளாதார திறன்கள் மிக்க ஒப்பந்ததாரர்களைத்
தேர்ந்தெடுத்து மத்திய அரசு நிர்ணயித்த காலத்திற்குள், அதாவது
மார்ச் 2021-க்குள் பாரத்நெட் திட்டத்தினை நிறைவேற்ற திருத்தியஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. இதில் எந்த வரையறை
மீறல்களும் இல்லை.
இந்நிலையில், மேற்கண்ட ஒப்பந்தப்புள்ளியில் Make in India
கொள்கையின்படி உள்ளூர் தயாரிப்பாளர்கள் போட்டியாளர்களின்
வாய்ப்புகளை குறைக்கும் வகையில் சில வரையரைகளை திருத்தங்கள்
செய்திருப்பதாக சில அமைப்புகள் தவறான புரிதலோடு, முழுமையாக
ஆராயாமல் புகார் அளித்ததன் பேரில், மத்திய அரசின் தொழில் மற்றும்
உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை (DPIIT), தமிழ்நாடு அரசின்
தலைமைச் செயலாளர் மற்றும் நிர்வாக இயக்குநர் (TANFINET)
ஆகியோரிடம் அறிக்கை கோரியுள்ளது.
“50 விழுக்காட்டிற்கு மேலாக உள்ளூர் தயாரிப்பாளர்கள் மற்றும்
போட்டியாளர்கள் பங்கேற்க வேண்டும்” என்ற மத்திய அரசின்
வரைமுறையை (Make in India) மீறி உள்ளதாக புகார்கள்
தெரிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால், தமிழ்நாடு அரசு வகுத்துள்ள இந்த
திருத்தப்பட்ட ஒப்பந்தப் புள்ளி வரையறைகளில், உள்ளூர்
தயாரிப்பாளர்கள் மற்றும் போட்டியாளர்கள் 50 சதவீதத்திற்கு மேலாக
பங்கேற்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த
ஒப்பந்தப் புள்ளியில், உள்நாட்டு தயாரிப்பாளர்கள், போட்டியாளர்கள்
பாதிக்கப்படுவார்கள் என்று கூறுவது முற்றிலும் தவறானது. இது
தொடர்பாக தனது விரிவான அறிக்கையை தமிழ்நாடு அரசு மத்திய
அரசுக்கு அனுப்ப உள்ளது.

குறித்த காலத்திற்குள் திட்டத்தை முடிக்க வேண்டும் என்ற
நோக்கத்தில், ஒப்பந்ததாரரின் திறமையையும் தகுதியையும்
வரையறுப்பது மக்கள் நலன் காக்கும் அரசின் பொறுப்பும் கடமையும்
ஆகும். இத்திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகளில், தகுதி உள்ள
நபர்கள் யார் வேண்டுமானாலும் e-tender முறையில் பங்கு பெற
முடியும் என்ற நிலையிலும், ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டிருக்கும் இந்த
ஆரம்ப கட்டத்திலேயே இன்னும் ஒப்பந்ததாரர்கள் முடிவு பெறாத
நிலையிலும், அரசியல் உள்நோக்கத்தோடு மாண்புமிகு எதிர்க்கட்சித்
தலைவர் இட்டுகட்டி கூறியிருப்பது, “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு,
கோழிக்குட்டி வந்ததுன்னு யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு கோழிக்குட்டி வந்ததுன்னு யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு
பூனைக்குஞ்சு சொன்னதுண்டு” என்ற திரைப்படப் பாடல் பூனைக்குஞ்சு சொன்னதுண்டு
வரிகளுக்கேற்ப கற்பனை கலந்த கதைகளை கட்டவிழ்த்துவிட்டு,
உண்மைக்கு மாறான அறிக்கை வெளியிட்டு வருவது வேடிக்கையாக
உள்ளது.
ஒரு புகார் மீது மத்திய அரசு வழக்கமான முறையில், அறிக்கை ஒரு புகார் மீது மத்திய அரசு வழக்கமான முறையில், அறிக்கை கோரிய ஒரு கடித குறிப்பின் அடிப்படையில்
எதிர்க்கட்சித் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் “பாரத் நெட் டெண்டருக்கு மத்திய அரசு தடை “பாரத் நெட் டெண்டருக்கு மத்திய அரசு தடை
விதித்து இருப்பதாகவும், ஊழல் தலை விரித்து ஆடுவது உறுதியாகி
இருப்பதாகவும்” என்று உண்மையை திரித்து என்று உண்மையை திரித்து என்று உண்மையை திரித்து அரசியல் செய்வது அரசியல் செய்வது
வியப்பாக உள்ளது. மத்திய அரசு, வியப்பாக உள்ளது. மத்திய அரசு, மத்திய அரசு, பாரத் நெட் பாரத் நெட் பாரத் நெட் திட்ட ஒப்பந்தப்
புள்ளிகளுக்கு புள்ளிகளுக்கு தடை ஏதும் செய்யவில்லை செய்யவில்லை செய்யவில்லை. பாரத் நெட் ஒப்பந்தப்
புள்ளியின் உண்மை நிலவரத்தைக் குறித்து இரண்டு முறை
விளக்கமாகவும் ஆதாரத்தோடும் எனது அறிக்கையினை

பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக தெளிவு படுத்தி
உள்ளேன்.
இது போன்ற தடைகளைத் தகர்த்து மாண்புமிகு அம்மாவின்
அரசு, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக தொலைநோக்கு
பார்வையோடு இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி காட்டும்
என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
கொரோனா நோய் தடுப்பு பணியில் தமிழ்நாட்டு மக்களின்
உயிரை பாதுகாக்க தமிழ்நாடு அரசு எடுத்து வரும் சிறப்பான
நடவடிக்கைகளை பாராட்டுவதற்கு பதிலாக இது போன்ற உண்மைக்கு
மாறான அறிக்கைகளை தொடர்ந்து வெளியிடுவதை
எதிர்க்கட்சித் தலைவர் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். ஆனால்,
உண்மை நிலையை மக்கள் நன்கு அறிவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *