மதுக்கடைகளை திறந்தே திமுக தான் – அமைச்சர் D. ஜெயக்குமார் குற்றச்சாட்டு…


சென்னை மாநகரில் கொரோனோ தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் ஒன்றான திருவிக நகர் பகுதியில் 88 தனிமைப்படுத்தப்பட்ட பகுதி கண்டறியப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனோ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது….

கொரோனோ பரவல் அதிகரித்துள்ள நிலையில் ஊரடங்கில் தமிழக அரசின் தளர்வு என்பது மத்திய அரசின் வழிகாட்டுதல்படி அறிவிக்கப்பட்ட ஒன்று.
திருவிக நகர் மண்டலத்தில் 15 வார்டுகளில் 3வார்டுகளில் மட்டும் பாதிப்பு அதிகமாக உள்ளது. 85 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளது. கிருமிநாசினி தெளிக்கும் பணி உள்ளிட்ட பகுதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மது சமூக பிரச்சினையாக உள்ளது.மதுவை ஒரே நாளில் ஒழித்துவிட முடியாது. மதுவை படிப்படியாக விலக்கு அளிக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம்…. தமிழகத்தில் மது குடிப்பவர்கள் அதிகரிக்க திமுக தான் காரணம்.
திமுக தான் மது விற்பனைக்கு மூல காரணம். திமுக தலைவராக இருந்த கலைஞர் தான் மதுக்கடைகளை துவக்கினார். அன்று ராஜாஜி அவர் கைப்பிடித்து கெஞ்சினார் ஆனால் கலைஞர் மதுவிலக்கை ரத்து செய்தார்.
அதன் பின்னர் எம்ஜிஆர் மதுவிலக்கை கடுமையாகக் கொண்டுவந்து ஆட்சியை நடத்தினார். ஆனால் கள்ளச்சாராயம் பெருகியதால் மெத்தனால் எத்தனாலை குடித்து மக்கள் உயிரிழந்தார்கள் இதனை கருத்தில் கொண்டு மீண்டும் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது.
படிப்படியாக கடைகளை மூட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருந்தது. டாஸ்மாக் மது விற்பனையை பொருத்தவரை எங்கள் கொள்கை, மது தேவை இல்லை என்பதுதான் தேர்தல் அறிக்கையிலும் அதைதான் கூறினோம்.
2016 ஆம் ஆண்டு ஆட்சி ஏற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 500 மதுக்கடைகளை மூடி கையெழுத்து இட்டு மதுக்கடைகளை மூடினார். பின்பு மது விற்பனைக்கான நேரத்தை குறைத்தார். மதியம் 12 மணி முதல் இரவு 10 மணிவரை கடைகள் திறக்கப்பட்டன. அதிமுக ஆட்சியில் 1600 கடைகள் இதுவரை மூடியுள்ளது. மீதி உள்ள 4 ஆயிரத்து 400 மதுகடைகள் படிப்படியாக ஒழிக்கும் நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்.
மத்திய அரசின் வழிமுறையைப் பின்பற்றி பல மாநிலங்கள் மதுக்கடைகளை திறந்துள்ளன. தமிழக அரசும் மத்திய அரசின் வழிமுறைகளை பின்பற்றி உரிய சமூக விதிகளை பின்பற்றும் வண்ணம் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

மேலும் அண்டை மாநிலங்கள் திறந்துள்ள நிலையில் மதுக்கடத்தல் அதிகரிக்கும். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவது மன அழுத்தத்திற்கு உள்ளாக்குவது. இதனால் தான் அரசு பல கட்டுப்பாடுகள் விதித்து திறந்துள்ளது.
கோயம்பேடு காய்கறி சந்தை வணிகர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை அதன் காரணமாகவே கோயம்பேடு மார்க்கெட் வாயிலாக அதிகமாக நோய்த்தொற்று பரவியது.
கொரோனா பாதிப்பானது 3ம் கட்டத்திற்கு செல்ல கூடாது என்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சமூக தோற்று என்பது இல்லை. பாதிக்கப்படக்கூடியவர்கள் தொடர்புகள் முறையாக கண்டறியப்பட்டு வருகிறது.
அதிமுக மக்களின் நலனை கருத்தில் கொண்டே செயல்பட்டு வருகிறது. ஆனால், திமுக தேர்தலை மட்டுமே மனதில் கொண்டு மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறது இதனை மமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …