மும்பை தண்டவாளத்தில் தூங்கிய வெளிமாநில தொழிலாளர்கள்.. வேகமாக மோதிய ரயில்.. மகாராஷ்டிராவில் 17 பேர் பலி!


மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் தண்டவாளத்தில் தூங்கியவர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 17 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா பாதிப்பு இந்தியா முழுக்க மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது நாடு முழுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 17ம் தேதி வரை நாடு முழுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுக்க பல்வேறு இடங்களில் பிற மாநில தொழிலார்கள் உணவு இன்றி மாட்டிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே சமயம் வெவ்வேறு மாநிலங்களில் வசிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் சில மாநிலங்களில் மக்களுக்கு போதுமான போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை. அதேபோல் இதற்கு அதிக கட்டணமும் வசூல் செய்யப்படுகிறது. இதனால் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்வது வழக்கமாகி உள்ளது.

பல்லாயிரம் கிலோ மீட்டர் நடந்தே செல்லும் இவர்கள், சாலையிலும், ரயில்வே தண்டவாளங்களிலும் உறங்குவது வழக்கமாகி உள்ளது. இந்த நிலையில்தான் வெளிமாநில ஊழியர்கள் தண்டவாளத்தில் உறங்கும் போது மகாராஷ்டிராவில் பெரிய அசம்பாவிதம் நடந்துள்ளது. அதன்படி மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் தண்டவாளத்தில் தூங்கியவர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 17 பேர் பலியாகி உள்ளன

கர்மாட் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரயில் அந்த பக்கம் வராது என்று நினைத்துக் கொண்டு 17 பேரும் தண்டவாளத்தில் படுத்து தூங்கி இருக்கிறார்கள். ஆனால் சரக்கு ரயில் ஒன்று அந்த தண்டவாளத்தில் வந்து,வேகமாக அவர்கள் மீது ஏறி சென்றுள்ளது. இதில் சம்பவ இடத்தில் 17 பேர் பாலியனார்கள்.

இவர்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் வெளியாகவில்லை. பலி எண்ணிக்கை இதை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …