தமிழ்நாடு சட்டமன்றச் செயலக நிருபர்கள் சங்கம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து கடிதம்…


இதன் தலைவர் செல்வம் எழுதிய கடிதத்தில்….
மதிப்பிற்குரிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மனித சமுதாயமே மிகப் பெரிய சவாலைச் சந்தித்துவரும் இத்தருணத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மிகச் சிறந்த முறையில் மேற்கொண்டு இந்தியாவிற்கே வழிகாட்டியாகச் செயல்பட்டுவரும் தமிழக அரசுக்கு இச்சங்கம் தனது மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறது.


தமிழக அரசின் இத்தகைய சிறப்பான நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து பணியாற்றிவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள், காவல் துறைப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள். ஆசிரியர்கள் மற்றும் அனைத்து அமைச்சுப் பணியாளர்கள் உள்ளிட்ட அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதினை 58-லிருந்து 59 ஆக உயர்த்தி அவர்கள் அகம் குளிரும் வகையில் முத்தானதோர் அரசாணையை வெளியிட்டுள்ளமைக்காக தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர்களுக்கு சங்கம் தனது உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …