மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் அருகே சரக்கு ரயில் மோதி வெளிமாநிலத் தொழிலாளர்கள் 16 பேர் உயிரிழப்பு. இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி இரங்கல் அறிக்கை

மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் அருகே ரயில் தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் இன்று (8.5.2020) அதிகாலை அவ்வழியே சென்ற சரக்கு ரயில் அவர்கள் மீது மோதியதில், சுமார் 16 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …