சென்னை அடுத்த திருமழிசையில் காய்கறி சந்தை திறப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை…


தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில், திருமழிசையில் தற்காலிக மொத்த காய்கறி சந்தை அமைக்கப்பட்டு வருவது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
அண்மையில் கோயம்பேடு சந்தையில் இருந்து தொற்று அதிகம் பரவியதைத் தொடர்ந்து கோயம்பேடு சந்தை மூடப்பட்டது.
இதனால் காய்கறி சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற இடம் தேர்வு செய்யப்படவேண்டிருந்து.
இதனையடுத்து சென்னை அருகே உள்ள திருமிழிசை இடம் தேர்வு செய்யப்பட்டு சந்தை அமைப்பதற்கான பணிகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சந்தையில் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் க. சண்முகம், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் J.K. திரிபாதி, இ.கா.ப., சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் டாக்டர் D. கார்த்திகேயன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …