மதுக்கடைகளை மூட tasmac உத்தரவு


தமிழகத்தில் கடந்த 7-ந்தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டன. சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
43 நாட்களுக்கு பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் மதுக்கடைகளை மூடக்கோரி பல்வேறு எதிர்க்கட்சிகள் போராட்டம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மதுக்கடைகளை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் மதுகளை வழங்க அனுமதி அளித்துள்ளது. ஊரடங்கு முடியும்வரை மது கடைகளை திறக்க வேண்டாம் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.


இதன் தொடர்ச்சியாக டாஸ்மார்க் தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. மேலும் மதுக்கடைகளை மூடி சீல் வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு முடியும்வரை மதுக்கடைகளை திறக்க கூடாது என்றும் கூறியுள்ளது.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …