காவல்துறையினருக்கு அடுத்தடுத்து கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு வரும் நிலையில் அவர்களின் பாதுகாப்பு குறித்தும் அரசு அக்கறை காட்ட வேண்டும்- டிடிவி தினகரன் ட்விட்டர் பதிவு…


தமிழகம் முழுவதும் காவல்துறையினருக்கு அடுத்தடுத்து கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு வரும் நிலையில் அவர்களின் பாதுகாப்பு குறித்தும் அரசு அக்கறை காட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

45 நாட்களுக்கு மேலாக ஓய்வு மற்றும் விடுப்பு இல்லாமல் தொடர்ந்து பணியாற்றிவரும் காவல்துறையினருக்குச் சரியான உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளைச் செய்து தராத பழனிசாமி அரசு, இப்போது மதுவிற்று வருமானம் பார்ப்பதற்காக டாஸ்மாக் கடை வாசல்களில் கொண்டு போய் அவர்களை நிறுத்தியிருக்கிறது.

இதில் பெண் காவலர்களின் நிலைமை மிகுந்த வேதனை அளிக்கிறது. ‘காவல்துறையினர் ரோபோக்கள் அல்லர்; அவர்களும் மனிதர்களே’என்பதை உணர்ந்து, கடுமையான பணிச்சுமையிலும், மன அழுத்தத்திலும் இருக்கும் அவர்களுக்கு மற்ற மாநிலங்களில் வழங்கப்படுவதைப் போன்ற ஓய்வு உள்ளிட்ட வசதிகள் கிடைக்கவும்.

தேவைப்படுவோருக்கு மருத்துவ கவுன்சிலிங் வழங்கிடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும் காவல்துறையில் உள்ள 55 வயதிற்கு மேற்பட்டோருக்கும், உடல் நலப்பிரச்சனைகள் இருப்பவருக்கும் சிறப்பு விடுப்பு அளிக்க வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …