அன்னையர் தின வாழ்த்துச் செய்தி


O Panneerselvam

ஆயிரம் உறவுகள் அவனியில் இருந்தாலும் அன்னை உறவுக்கு இவ்வுலகில் ஈடு இணை ஏதுமில்லை. என்றுமே தன்னலம் பாராது மற்றவர்களின் நலனை மட்டுமே சிந்தையில் நிறுத்தி ஓயாது உழைக்கும் தியாக உள்ளங்களாம் அன்னையரை எந்நாளும் போற்றுவோம்!

“மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என தன்னலம் கருதாமல் தாயுள்ளத்தோடு மக்களின் நலனுக்காகவே தன்னை அர்ப்பணித்து, தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்களை இந்நன்னாளில் போற்றி வணங்குகிறேன்.

Dr Tamilisai Soundararajan

அனைத்து தினமும் அன்னைக்கான தினமே… ஆனாலும் இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் ஆதலால் அணைக்கும் அன்னையை என்றும் துணையாக,தூணாக இருக்கும் அன்னையை எந்நாளும் போல் இந்நாளும் கொண்டாடுவோம்… அனைவருக்கும் அன்னையர் தின நாள் நல்வாழ்த்துக்கள் …

Dr C Vijayabaskar

அம்மா…

என்னை கருவில் சுமந்த நீ கருவறை காணாத தெய்வம்…

என்னை கண்ணென காக்கும் நீ கடவுளுக்கும் முந்தையவள்….

இன்று மட்டுமல்ல எனக்கு என்றென்றும் அன்னையர் தினமே!

வையகத்தின் அன்னையருக்கு அன்னையர் தின வாழ்த்துகள் ! #mothersday2020 #அன்னையர்தினம் #அம்மா

TTV Dhinakaran

தாய்மை எனும் ஈடு இணையில்லாத குணத்தோடு திகழ்கிற அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் எல்லாம் நிறைந்து வாழும் தாய் நம்முடைய இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். ‘அம்மா’ என்று சொன்னாலே இன்றைக்கு அத்தனை பேரின் கண் முன்னேயும் தமது உருவம் தோன்றுகிற அற்புதத்தை நிகழ்த்திய அம்மா அவர்களை இந்த நல்ல நாளில் நினைவு கூர்வோம்.

M.K.Stalin

உயிரின் கரு!

உணர்வின் திரு!

வாழ்வின் உரு!

வளர்ச்சியின் எரு!

எல்லாம் சேர்ந்தவள் அன்னை!

இயற்கையும் அன்னையும் இல்லாமல் எவரும் வளரவும் வாழவும் முடியாது!

என் அன்னைக்கும் அவர் போன்ற அன்னையர் குலத்துக்கும் வாழ்த்துகள்!

உங்கள் அன்பும் கருணையுமே உலகம் என்றும் வேண்டி நிற்பது!

D Jayakumar

Virat Kohli

Happy mother’s day

Actor Soori

உலகத்தில் உள்ள அனைத்து தெய்வமும் ஒரே உருவத்துல தெரியுராங்கனா அது நம்ம தாயாகத் தான் இருக்க முடியும். அத்தனை அம்மாக்களுக்கும் “அன்னையர் தின” நல்வாழ்த்துக்கள்”

Bouquet

சீமான்

தாயை விஞ்சிய புனிதம் வேறு இல்லை! #அன்னையர்தினம் நல்வாழ்த்துகள்!

Janani@jan_iyer

I can imagine no heroism greater than motherhood!

Happy Mother’s Day to all the gorgeous moms out there !