டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்லும் தமிழக அரசு – தலைவர்கள் கண்டனம்

Kamal Haasan

குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட தமிழ் பெண்களின் தாலிகளோடு, குடிக்காத தமிழர்களின் உயிரையும் பணயம் வைத்து, சூதாட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்லுமாம் தமிழக அரசு. எங்கும் வருவோம் உமைத் தடுக்க. மக்கள் நீதியே வெல்லும்.

Rajinikanth

இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்

M.K.Stalin

நிர்வாகத் திறமையற்ற #குடிக்கெடுக்கும்_அதிமுக அரசுக்குத் தக்க பாடமாக, ஊரடங்கு காலம் முடியும் வரை மதுக்கடைகளை மூடவேண்டும் என்னும் உயர்நீதிமன்றத்தின் ‘மக்களைக் காக்கும்’ உத்தரவை திமுக வரவேற்கிறது. மேல்முறையீட்டு முயற்சிகளைத் தவிர்த்து உத்தரவை ஏற்று அதிமுக அரசு நடக்க வேண்டும்.

Dr ANBUMANI RAMADOSS

All the hard work, the Government has done so far against #COVID19 has been neutralised by the opening of #TASMACShops. It is disheartening to see lakhs of people standing in queue without following Social Distancing, which will lead to wave of people being infected with #COVID19

Thol. Thirumavalavan

#மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றத்தை நாடுவதா? தமிழக அரசு மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம். மீண்டும் தமிழகஅரசு மதுக்கடைகளைத் திறந்தால் அதன்மூலம் கொரோனா தொற்று அதிகரிக்கும் என்பது உறுதி. அதற்கு முதலமைச்சரே முழுப் பொறுப்பேற்கவேண்டும் என சுட்டிக்காட்டுகிறோம்.

TTV Dhinakaran

“பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்…” – என்பதை நிரூபிக்காதீர்கள்! மக்களின் உயிரோடு விளையாடும் வகையில், கோடிக்கணக்கான தாய்மார்கள் கண்ணீரில் மிதந்தாலும் பரவாயில்லை என்ற கொடூர மனப்பான்மையோடு மதுக்கடைகளைத் திறப்பதில் அரசு காட்டும் உறுதி வெட்கக்கேடானது.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …