சில நிறுவனங்களுக்கான பதிவு செய்தல் அங்கீகாரங்களுக்கான புதிய நடைமுறைகள் 2020 அக்டோபர் 1 வரை ஒத்திவைப்பு


முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மக்களுக்கும், பொருளாதாரத்திலும் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு, சில நிறுவனங்களுக்கான அங்கீகாரம் / பதிவு செய்தல் / அறிவிக்கை செய்தலுக்கான புதிய நடைமுறைகள் அமலாக்கத்தை 2020 அக்டோபர் 1 ஆம் தேதி வரையில் ஒத்திவைக்க சி.பி.டி.டி. முடிவு செய்துள்ளது. எனவே வருமான வரிச் சட்டம் 1961ன் 10(23C), 12AA, 35 மற்றும் 80G பிரிவுகளின் கீழ் அங்கீகாரம் / பதிவு செய்தல் / அறிவிக்கை செய்யப்பட்ட நிறுவனங்கள் 2020 அக்டோபர் 1 ஆம் தேதியில் இருந்து 3 மாத காலத்துக்குள் தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். அதாவது 2020 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், புதிய நிறுவனங்களுக்கான அங்கீகாரம் / பதிவு செய்தல் / அறிவிக்கை செய்தலுக்கான திருத்தப்பட்ட நடைமுறைகள் 2020 அக்டோபர் 1 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும்.

இதற்குரிய சட்ட திருத்தங்கள், வரும் காலத்தில் உருவாக்கப்படும்.

கோவிட்-19 தொற்று தாக்குதல் மற்றும் அதன் தொடர்ச்சியான முடக்கநிலை அமல் சூழ்நிலையில் புதிய நடைமுறைகளை வரும் ஜூன் 1 ஆம் தேதியில் இருந்து அமல் செய்வதில் உள்ள பிரச்சினைகள் குறித்து நிதியமைச்சகத்துக்கு நிறைய முறையீடுகள் வந்தன.  புதிய நடைமுறைகளை அமல் செய்வதைத் தள்ளிவைக்க வேண்டும் என்று நிறைய கோரிக்கைகளை வந்திருந்தன.

Source: Press Information Bureau – Govt. of India

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …