பொதுத் துறை நிறுவனமான என்.டி.பி.சி.யின் மூன்று மின் உற்பத்தி நிலையங்களில் முழு உற்பத்தித் திறன் எட்டப்பட்டது.


இந்தியாவின் மிகப் பெரிய மின் உற்பத்தி நிறுவனமாக உள்ள, மின் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான  தேசிய அனல் மின் கழகம் (National Thermal Power Corporation Limited – NTPC) மூன்று மின் உற்பத்தி நிலையங்களில் 2020 மே 9 ஆம் தேதி முழு உற்பத்தித் திறனை எட்டியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள விந்தியாச்சல் தேசிய அனல் மின் கழகம் (4760 மெகாவாட்), ஒடிசாவில் தால்ச்சர் கனிஹாவில் உள்ள தேசிய அனல் மின் கழகம் (3000 மெகாவாட்) மற்றும் சத்தீஸ்கரில் சிப்பட்டில் உள்ள தேசிய அனல் மின் கழகம் (2980 மெகாவாட்) ஆகியவற்றில் நூறு சதவீத உற்பத்தித் திறன் எட்டப்பட்டது. கோவிட்-19 முடக்கநிலை நெருக்கடியிலும், சிறப்பான செயல்பாட்டுத் திறனை நிரூபிக்கும் வகையில், இந்த மூன்று உற்பத்தி நிலையங்களும் முழுத் திறனை எட்டியுள்ளன.

தேசிய அனல் மின் கழகம் லிமிடெட்டின் மொத்த 62110 மெகாவாட் உற்பத்தித் திறனில், நிலக்கரி சார்ந்த 24 மின் உற்பத்தி நிலையங்கள், எரிவாயு / திரவ எரிபொருள் அடிப்படையில் 7 உற்பத்தி நிலையங்கள், 1 நீர்மின் உற்பத்தி நிலையம், புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களின் அடிப்படையிலான 13 உற்பத்தி நிலையங்கள், கூட்டு முயற்சியில் 25 உற்பத்தி நிலையங்கள் என 70 மின் உற்பத்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன.

Source: Press Information Bureau – Govt. of India

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …