மாலத்தீவில் தங்க நேர்ந்த இந்தியக் குடிமக்களை அழைத்து வர சென்றது சமுத்ர சேது செயல்திட்ட கப்பல் ஐ என் எஸ் மகர்


மாலத்தீவில் தங்க நேர்ந்துவிட்ட இந்தியக் குடிமக்களை அங்கிருந்து சுமுகமாகவும் பாதுகாப்பாகவும் வெளியேற்றி அழைத்து வருவதற்காக இந்தியக் கடற்படையின் சமுத்திர சேது திட்டத்தின் கீழ் புறப்பட்ட இரண்டாவது கப்பலான ஐஎன்எஸ் மகர் மே 10 ம் தேதி அன்று காலை மாலே சென்றடைந்தது. மாலத்தீவில் இருந்து வரும் இந்தியக் குடிமக்களுக்கு ஏற்ற வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்பதற்காக, மாலத்தீவுக்குப் புறப்படும் முன்னரே, கொச்சி துறை முகத்திலேயே போக்குவரத்து, மருத்துவம், நிர்வாகம் தொடர்பான அனைத்து தேவையான ஆயத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

சமூக விலகியிருத்தல் விதிமுறைகள் உட்பட கோவிட் 19 தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்படுவது உறுதி செய்யப்பட்டு, சுமார் 200 இந்தியக்குடிமக்கள், இந்தக் கப்பல் மூலம் அழைத்து வரப்படுவார்கள்.  இக்கப்பலில் அழைத்து வரப்படவுள்ளவர்களுக்காக உணவு மற்றும் கழிவறை பகுதிகள் கப்பலில் தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. குழந்தைகள், பெண்கள் மற்றும் மூத்த குடி மக்களுக்காக தனி உணவகமும் ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உணவறை, குளியலறைகள் ஆகியவற்றில் கூட்டம் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக, குடிமக்கள் தனித்தனி குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம் முதலாவது கப்பல் ஐஎன்எஸ் ஜலஷ்வா, மாலத்தீவிலிருந்து 698 இந்தியக் குடிமக்களுடன் இன்று காலை கொச்சி வந்தது.