3 லட்சம் புகைப்படக் கலைஞர்களின் குடும்பங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை…


மார்ச் 24 ம் தேதி முதல் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு 144 தடை உத்தரவை அமல்படுத்தியது இந்த தடை உத்தரவால் அனைத்து தரப்புமக்களும், தொழில்களும் பாதிக்கப்பட்டிருந்தாலும், தமிழக அரசு நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நிவாரணம் வழங்கியது. ஆனால் தமிழகம் முழுவதும் மூன்று லட்சம் புகைப்படக் கலைஞர்கள் இருந்தும் நலவாரியத்தில் அவர்கள் உறுப்பினராக இல்லை அவர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்க்க முன்பு கோரிக்கை வைத்தும் அரசு அதில் ஆர்வம் காட்டவில்லை நல வாரியத்தில் உறுப்பினர்களாக இல்லாத பல் தொழில்களை சேர்ந்த அனைவருக்குமே தமிழக அரசு உரிய சலுகைகளை வழங்கி, அவர்களுடைய தொழில்கள் நலிவடையாமல் இருக்க தொழில் தொடங்க கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் இந்த சூழ்நிலையில் நலவாரிய உறுப்பினர்களுக்கு கிடைத்த அரசின் உதவியும் இவர்களுக்கு கிடைக்கவில்லை ஊரடங்கு உத்தரவால் கடந்த 49 நாட்களுக்கும் மேலாக திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள், ஆன்மீக வழிபாடுகள், கோயில் கும்பாபிஜேகங்கள், அரசியல் கட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எதுவும் நடைபெறாததால் வருமானம் இல்லாமல் அவர்களின் குடும்பம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு கூட இலவச என்னில் பேசினால் உனடியாக அரசி உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கும் என்று தெரிவித்தது அதேபோல் நலவாரியத்தில் உறுபினர்களாக இல்லாத இந்த புகைப்பட கலைஞர்களுக்கும் நிவாரணத்தொகையை தமிழக அரசு அளித்திருக்கலாம் எனவே இவர்களின் வறுமையை கருத்தில் கொண்டு உதவித்தொகை வழங்கிடவும், நலவாரியத்தில் உறுப்பினர்களாக்கவும், தொழிலை தொடங்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …