செவிலியர்களின் சேவைக்கான விருதுகளும் பாராட்டுக்களும் காத்துக்கொண்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


சர்வதேச செவிலியர் தினத்தையொட்டி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு மையத்தில் செவிலியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினமான மே 12ஆம் தேதி ஆண்டுதோறும் சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு மையப் பொருளோடு கொண்டாடப்படும் இந்நாள் இந்தாண்டு ‘உலக ஆரோக்கியத்திற்கான சேவை’ ஆண்டாக கொண்டாடப்படுகிறது.

கொரானாவால் உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மருத்துவர்களும் செவிலியர்களும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். செவிலியர்களின் சேவையை பாராட்டும் விதமாக மருத்துவமனை முதல்வர் நாராயணபாபு செவிலியர்களை பாராட்டினார்.

புளோரன்ஸ் நைட்டிங்கேல் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர் தின உறுதிமொழி ஏற்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக மீள வேண்டும் என்ற அடிப்படையிலும் செவிலியர் சேவையை சிறப்பாக தொடர வேண்டும் என்ற எண்னத்திலும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்வில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செவிலியர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

செவிலியர்கள் அனைவரும் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் எனக் கூறிய அமைச்சர் செவிலியர்களின் சேவைக்கான விருதும் பாராட்டுக்களும் காத்துக்கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.

சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் மருத்துவமனை முதல்வரின் பேச்சுக்கள் செவிலியர்களை மேலும் ஊக்குவித்தது.

இடம் : ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …