தமிழக அரசு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1 ந்தேதி முதல் 12 ம் தேதி வரை நடத்துவதை மாணவர்கள் நலன் கருதி மறுபரிசீலனை செய்ய தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்

தமிழக அரசு கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைத்த நிலை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் அடுத்த மாதம் ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்பதையும் அதற்கான அட்டவணையும் வெளியிட்டுள்ளார் இது அவசர கோளத்தில் எடுத்த முடிவாகவே எண்ணத் தோன்றுகிறது ,

பல மையங்களில் ஆறு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஓரே மையத்தில் தேர்வு எழுத்திகின்ற சூழ்நிலையில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத சூழ்நிலை ஏற்படும் இந்நிலையில் ஏற்காவது ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அது பலருக்கு பரவ வாய்ப்புள்ளது தேர்வு எழுதுவது என்பதை கேள்விக்குறியாகிவிடும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும் தமிழக இதை உணர்ந்து மறுபரிசீலனை செய்ய இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன் ,

அப்படி தேர்வுகள் நடைபெறும் பட்சத்தில் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடிக்கின்ற விதமாக மாணவர்கள் படிக்கின்ற பள்ளிகளிலேயே தேர்வு மையத்தை ஏற்படுத்தி மாணவர்கள் தேர்வு எழுத தமிழக அரசு ஏற்பாடு செய்ய தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பாக கேட்டுக் கொள்கிறேன்
~~~
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
9445454044

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …