இம்சை அரசன் 23ஆம் புலிக்கேசி திரைப்பட நாயகனின் அரசியல் வடிவமாகத் திகழும் மு.க. ஸ்டாலின்- அமைச்சர் பாண்டியராஜன் குற்றச்சாட்டு

வெற்றுக் கதைகளைப் பேசி, சிறுபிள்ளைத்தனமாக
நோய் தொற்றின் வழியாகவாவது ஆட்சி அதிகாரத்தை பிடிக்க
நினைக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு
தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடுத் துறை
அமைச்சர் க. பாண்டியராஜனின் கண்டன அறிக்கை …

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக மக்கள் மீது
அக்கறை உள்ளது போல் நாடகமாடும் தி.மு.க தலைவர்
மு.க. ஸ்டாலின் கரோனா நோய் தொற்றின் வழியாகவாவது ஆட்சி
அதிகாரத்தை பிடித்து விட மாட்டோமா என்று ஒவ்வொரு நாளும்
எடுக்கும் முயற்சிகளை பார்த்து ஊர் சிரிக்கிறது.

உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப்படைக்கிறது என்னும் நோய். வல்லரசு நாடுகள் முதல் சின்னஞ்சிறிய நாடுகள் வரை இதற்கு விதிவிலக்கல்ல. இந்த நோயின் கோரப்பிடியில் எல்லோரும் எப்படி அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றி எட்டு திசையிலும் இருந்து வரும் செய்திகளை ஒவ்வொரு மணி நேரமும் தொலைக்காட்சிகளில், மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் காட்சிகளையும், நோயுற்றோர் எண்ணிக்கைகளையும் தமிழ்நாட்டின் நிலவரத்தோடு ஒப்பிடும் போது, தமிழ்நாடு அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளால் கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதைக் கண்டும், இறந்தோர் எண்ணிக்கை மிக குறைவாக, கட்டுக்குள் இருப்பதைக் கண்டும் நிம்மதி அடைந்திருக்கிறார்கள். இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், நீலிக்கண்ணீர் வடிக்கிறார் மு.க. ஸ்டாலின்.

திமுக ஆட்சிக் காலத்தைப் போல அரிசி பஞ்சம், பதுக்கல் சாம்ராஜ்யம், மந்திரிகளின் மறைமுக பேரங்கள், 20 மணி நேர மின்வெட்டு, தண்ணீர் பஞ்சம், மக்களின் கையில் ஒரு ரூபாய்க்கும் வழியில்லாத பணத்தட்டுப்பாடு என்பன இன்றைக்கு இல்லையே என்பதுதான் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கவலையாக இருக்கிறது. அத்தகைய இருண்ட காலம் ஒரு போதும் இனி வராது. கொரோனா போன்ற பெருந்தொற்று உள்ள நேரத்திலும் மக்களை பாதுகாக்கும் ஒரே நோக்கத்தோடு, கட்டுக்கோப்புடன் நடைபெறும் ஆட்சியாக தமிழக அரசு திகழ்கிறது.

வெற்றுக் கதைகளைப் பேசி, சிறுபிள்ளைத்தனமாக நாடகங்களை
நடத்தி, இம்சை அரசன் 23ஆம் புலிக்கேசி திரைப்பட நாயகனின்
அரசியல் வடிவமாகத் திகழும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
தன்னிலை உணரட்டும். “இந்த கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை” என்ற திரைப்பட வசனம் இன்று தன்னை நோக்கி மக்களால் பேசப்படுவதை இனியேனும் திரு. மு.க.ஸ்டாலின் செவி கொடுத்து கேட்கட்டும்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …