அரசு இயந்திரத்தை திறம்பட செயல்பட வைக்கும் அதிகாரிகளை குழப்பி, ஆட்டம் காண வைக்கும் சதி செயலில் திமுக ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கோயம்பேடு சந்தையை திருமழிசைக்கு இடமாற்றம் செய்த விவகாரத்தில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு வராமல் தமிழக அரசு சமயோசிதமாக செயல்பட்டதாகவும், நோய்த்தொற்றுக்கு வியாபாரிகளோ பொதுமக்களோ காரணம் அல்ல என்றும் விளக்கமளித்தார்.

திமுகவைப் போல் யார் மீதும் பழி போட்டு தப்பிக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை என்றும் சந்தையை விட்டு வெளியேறியே ஆக வேண்டும் என்று சட்டத்தின் மூலம் வியாபாரிகளின் கழுத்தை நெரிக்க முடியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு நேர்மையாக செயல்படும் Gentle Man தலைமைச் செயலாளர் சண்முகம் மனதை திமுக கஷ்டப்படுத்தி உள்ளதாகவும், மோதுவதாக இருந்தால் தமிழக அரசுடன் மட்டுமே மோத வேண்டும் என்றும், அதிகாரிகளை மிரட்டும் செயலில் திமுக ஈடுபடக்கூடாது என்றும் கூறினார்.

அரசு இயந்திரத்தை திறம்பட செயல்பட வைக்கும் அதிகாரிகளை குழப்பி, ஆட்டம் காண வைக்கும் செயலில் திமுக திட்டமிட்டு சதி செய்வதாக குற்றம் சாட்டிய அமைச்சர் ஜெயக்குமார், தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் வாய்க்கொழுப்பெடுத்து, பணத்திமிரில் தயாநிதி மாறன் பேசி உள்ளதாகவும், தயாநிதி மாறனின் செயலை திருமாவளவன் உள்ளிட்டோர் கண்டிக்க வேண்டும் என்றும் கூறினார்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …