அரசு அலுவலகம் வாரத்தில் 6 நாட்கள் பணி நாட்களாக செயல்படும். சனிக் கிழமையும் இயங்கும்- தமிழக அரசு…


அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் 3 குழுக்களாக பிரித்து வாரத்தில் 6 நாட்கள் பணியாற்ற உத்தரவு. அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் வாரத்தில் 6 நாட்கள் பணியாற்ற உத்தரவு.

18ந் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற உத்தரவு. அரசு அலுவலகங்களில் ஊழியர்களை 3 குழுக்களாக பிரித்து வாரத்தில் தலா 2 நாட்கள் வீதம் பணியாற்ற உத்தரவு. குரூப் ஏ பணியாளர்கள் வாரத்தின் 6 நாட்களிலும் பணியாற்ற வேண்டும்.

அரசு அலுவலகங்களின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களும் வாரத்தின் 6 நாட்களும் பணியாற்ற வேண்டும். சுழற்சி முறையிலான பணியின் போது வீட்டில் இருக்கும் ஊழியர்கள் எலக்ட்ரானிக் முறையில் அலுவலகத்தில் தொடர்பில் இருக்க வேண்டும்.

காவல்துறை, சுகாதாரத்துறை, கருவூலத்துறை, மாவட்ட நிர்வாக அலுவலகங்கள் ஏற்கனவே செயல்படும் முறையிலேயே தொடரும்.
தலைமைச் செயலகம் முதல் மாவட்ட அரசு அலுவலகம் வரை அனைத்து பணியாளர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்.
தேவையான போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தரப்படும் – தமிழக அரசு.

அனைத்து அலுவலர்களும் பணிக்கு வர தயாராக இருக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு சனிக்கிழமையும் வேலை நாளாக அறிவித்தது தமிழக அரசு.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …