ரேஷன் கடை ஊழியர்களுக்கு செலவின கையாக நாளொன்றுக்கு ரூ.200 வழங்கப்படும்- தமிழக அரசு


ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு செலவின கையாக நாளொன்றுக்கு ரூ.200 வழங்கப்படும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக அத்தியாவசிய பொருட்கள் பெறுவதற்கான கடைகள் மட்டுமே தற்போது திறந்த இருக்கின்றன. மேலும் கடந்த 45 நாட்களாக தமிழகத்தில் எந்த ஒரு பணிகள் செய்யவும் தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.
தற்போது 3 ஆம் கட்ட ஊரடங்கிலிருந்து சில தொழில்களை செய்ய அனுமதி வழங்கி உள்ளது. ஏழை நடுத்தர குடும்பத்தார்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகளில் இலவச பொருட்களான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டது. இது தொடர்ச்சியாக மே, ஜூன் மாதமும் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ஊரடங்கின் காலத்தில் பணிபுரியும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு செலவின கையாக நாளொன்றுக்கு ரூ.200 வழங்கப்படும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் உள்ள 34,000 ரேஷன் கடைகளில் பணியாற்றும் 24,000 பணியாளர்கள் இதன் மூலம் பயன் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …