புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரி மோதிய விபத்தில் உயிரிழந்துள்ள 21 பேருக்கு இரங்கல்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்

உத்தரபிரதேசம் மாநிலம், அவுரியா மாவட்டத்தில், புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரியும் மற்றொரு லாரியும் மோதிய விபத்தில், சுமார் 21 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …