தேசிய வேளாண் சந்தையுடன் 38 புதிய சந்தைகள் ஒருங்கிணைப்பு


தேசிய வேளாண் சந்தை தளத்தில்  கூடுதலாக 38 சந்தைகள் இன்று ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.  இதனால் திட்டமிட்ட இலக்கின்படி 415 சந்தைகளை ஒருங்கிணைப்பதற்கான மைல்கல்லை எட்டியுள்ளது. ஏற்கனவே,  திட்டமிடப்பட்ட 38 சந்தைகளில், மத்திய பிரதேசத்தில் 19, தெலங்கானாவில் 10, மஹாராஷ்டிராவில்  4 சந்தைகளும் குஜராத், ஹரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ஜம்மு காஷ்மீரில் ஆகியவற்றில் தலா ஒரு சந்தையுமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால் இது சாத்தியமாயிற்று.

முதல் கட்டமாக 585 சந்தைகள் ஒட்டுமொத்தமாக வெற்றிகரமாக இணைக்கப்பட்டதை தொடர்ந்து மேலும் அதன் பரப்பை விரிவு படுத்தி, இரண்டாம் கட்டத்தில் 415 புதிய சந்தைகள் இணைக்கப்பட்டிருப்பதால் தேசிய வேளாண் சந்தை தளத்தில் தற்போது 18 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன்  பிரதேசங்களில் உள்ள சந்தைகளின் மொத்த எண்ணிக்கை 1000 ஆக  உள்ளது.

தேசிய வேளாண் சந்தையை, சிறு விவசாயிகள் வேளாண் வணிக கூட்டமைப்பு (எஸ்ஃப்எசி ) அமல்படுத்தி வருகிறது. இதற்கு, இந்திய அரசின் விவசாயம் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகத்தில் கீழ் இயங்கும் இந்த கூட்டமைப்பு முன்னோடி நிறுவனமாக உள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அனைத்து தேசிய வேளாண் சந்தை, மாநில சந்தைபடுத்தும் வாரியங்கள், சந்தை செயலாளர்கள், கண்கானிப்பாளர்கள், தரமதிப்பீட்டாளர்கள், எடை ஆபரேட்டர்கள், சேவை வழங்குவோர் விவசாயிகள், உணவு பதப்பத்தும் துறையினர், வணிகர்கள் மற்றும் தேசிய வேளாண் சந்தை குழுவினர் ஆகியோரின் ஆதரவுடன் அமல்படுத்தப்படுகிறது.

இந்தியாவின் மின்னணு வர்த்தக இணையமுகப்பான தேசிய வேளாண் சந்தையை (இ நாம்) பிரதமர் திரு நரேந்திர மோடி 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று தொடங்கி வைத்தார். இந்தியாவில் வேளாண் விளை பொருள்களுக்கு “ஒரே நாடு, ஒரே சந்தை” என்ற நோக்கில் தற்போதுள்ள சந்தைகளை தொகுத்து பொதுவான ஆன்லைன் சந்தை தளத்திற்கு கொண்டு வரும் நோக்கத்துடன் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.

தேசிய வேளாண் சந்தையின் இது போன்ற புரட்சிகரமான செயல்பாடுகள் ஒரே நாடு, ஒரே சந்தை என்ற இலட்சியத்தை, மேலும் வலுப்படுத்துவதாக அமையும். விவசாயிகள், வணிகர்கள், மற்றும் சந்தைகள் ஒன்றிணைந்து கூட்டாக பணியாற்றவும் வசதியளிக்கும்.  ஆன்லைன் விற்பனை மற்றும் தேசிய வேளாண் சந்தை முகப்பு வழியாக வேளாண் உற்பத்தி பொருள்களை வாங்குவதற்கும் இது ஒருங்கிணைப்பு கூடமாக அமையும்.

Source: Press Information Bureau – Govt. of India

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …