மதுக்கடை திறந்ததை கண்டித்து அ.தி.மு.க தலைமை அலுவலகம் முற்றுகை போராட்டம்- போராட்டக்காரர்கள் கைது…


தனிநபர் சத்தியா கிரகம்” தமிழ்நாடு பாரத மக்கள் இயக்கம் சார்பில் சென்னை அ.தி.மு.க தலைமை அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

கரோனா வைரஸ் தடுப்பு காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மளிகை கடைகள் மற்றும் மருந்தகம், பால் விற்பனை கடைகள் திறக்கப்பட்டன. பின்னர் தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை கடந்த 7 தேதி திறந்து. பின்னர் சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றம் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனால் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் அறிவித்த தடையை நீக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மீண்டும் திறக்கப்பட்டது.

இதனை கண்டித்தும் மதுக்கடையை திறந்த அ.தி.மு.க. அரசை கண்டித்தும் அ.தி.மு.க.தலைமை அலுவலகம் முற்றுகை போராட்டத்தை ”தனிநபர் சத்தியா கிரகம்” தமிழ்நாடு பாரத மக்கள் இயக்கம் சார்பில் E.ராமதாசன் தலைமையில் நடைபெற்றது.

கரோனா தொற்று காரணமாக இப்போராட்டத்தில் இரு பெண்கள் உட்பட மூன்று ஆண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து காவல்துறை இவர்களை தடுத்து நிறுத்தி, இவர்களை கைது செய்து ராயப்பேட்டையில் உள்ள நல்வழி திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

மேலும் மதுக்கடைகளை திறக்கலாம் என்று அனுமதியளித்த பிரதமர் மோடியை கண்டித்தும், கொரோனா தொற்று காலத்தில் கூட மதுக்கடைகளை திறக்கும் தமிழக அரசை கண்டித்தும், கொரோனா நேரத்தில் கூட தன் கட்சிக்காரர் சார்ந்த மது தொழிற்சாலைகளை நடத்துவதை கண்டிக்காத தி.மு.க. வை கண்டித்தும் ”நேர்மை அணி” ”தனிநபர் சத்தியா கிரகம்” போராட்டம் நடத்தஇருக்கிறார்கள்.