ஆம்பன் அதி தீவிர புயல் இன்று வட திசையில் நகர்ந்து இன்று அதிகாலை 2:30மணி அளவில் உச்ச உயர் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது


நேற்று மாலை தெற்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆம்பன் அதி தீவிர புயல் இன்று வட திசையில் நகர்ந்து இன்று அதிகாலை 2:30மணி அளவில் உச்ச உயர் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக இன்று மத்திய வங்கக்கடல் தென் பகுதிகளில் கடும் சூறாவளிக் காற்று மணிக்கு 140-150 கி.மீ வேகம் வரையிலும் இடையிடையே 165கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். மேலும் தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45-55 கி.மீ வரையிலும் அவ்வபோது 65கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

நாளைய(19/5/20) தினம் மத்திய வங்கக்கடலின் வடக்கு பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடும் சூறாவளிக் காற்று மணிக்கு 170- 180கி.மீ வேகத்திலும்,இடையிடையே 200கி.மீ வேகத்திலும். மேலும் வடக்கு ஒரிசா மற்றும் மேற்கு வங்காள கடல்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45-55 கி.மீ வரையிலும்,இடையிடையே 65கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை மறு தினம்(20/5/20) வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடும் சூறாவளிக் காற்று மணிக்கு 155-165 கி.மீ வரையிலும், இடையிடையே 180கி.மீ வரையிலும் வீசக்கூடும். மேலும் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 75-85 கி.மீ வேகத்திலும், இடையிடையே 95கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்..

கடல் மிக சீற்றத்துடனும் இடையே அதி சீற்றத்துடனும் காணப்படும்.

இதனால் வரும் 20ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் மேற்கூறிய பகுதியிலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என அறிவுருத்துகின்றார்கள்.

வட தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையை காட்டிலும் 2-3டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயர்ந்து காணப்படும்.

சென்னையை பொருத்துவரை பொதுவாக மேகமூட்டத்துடனும் நகரின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 36டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29டிகிரி செல்சியசை ஒட்டியே இருக்கும்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …