திங்கள்கிழமை முதல் அரசு ஊழியர்கள் சொந்த செலவில் பணிக்கு வர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது


தமிழக அரசு இது தொடர்பாக வெளியிட்டுள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா நோய் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம்காரணமாக மே 15ம் தேதி வரை 33 சதவீத பணியாளர்களுடன் தலைமை செயலகம் இயங்கியது

அவர்களின் வசதிக்காக மாநகர போக்குவரத்துக்கழகம், விழுப்புரம் போக்குவரத்து கழகம் ஆகியவற்றின் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு அவற்றுக்கான செலவை அரசே ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில் நாளை முதல் அனைத்து அரசு அலுவலங்களிலும் 50 சதவீத அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. எனவே அனைத்து அரசு ஊழியர்களும் இந்த பேருந்து வசதிகளை உரிய கட்டணம்செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …