தாத்தா¸ பாட்டியை பார்க்கும் ஆர்வத்தில் 50 கிலோமீட்டர் தூரம் வழிதவறி சென்ற சிறுவனை மீட்ட போலீசார்


கடலூர் மாவட்டம்¸ புவனகிரியை சேர்ந்தவர் திரு.சாந்தமூர்த்தி. இவரது மகன் வெற்றிசெல்வன் அதேபகுதி பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறான். தாத்தா¸ பாட்டி வீடு சேத்தியாதோப்பில் உள்ளது.

கொரோனா பொதுமுடக்கத்தால் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டு வீட்டிலேயே இருக்கும் வெற்றிசெல்வன்¸ தனது தாத்தா¸ பாட்டியை காணவேண்டும் என தந்தையிடம் கூறி வந்துள்ளான். இதனிடையே போக்குவரத்து ஏதும் இல்லாததால் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என தந்தை கூறிவிட்டார்.

இந்நிலையில் வெற்றிசெல்வன் தனது தந்தையின் டிவிஎஸ் எக்ஸ்எல் மோட்டார் சைக்கிளை அவருக்கு தெரியாமல் எடுத்துக்கொண்டு தாத்தா வீடான சேத்தியாதோப்புக்கு செல்லும்வழியில் வழிதெரியாமல் சிதம்பரத்தை கடந்து சீர்காழி புறவழிச்சாலை எருக்கூர் என்ற இடத்தில் வந்தபோது அவனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்துவிட்டதால் சிறுவன் வெற்றிசெல்வன் வண்டியை தள்ளிக்கொண்டே அழுதபடி வந்துள்ளான்.

அப்போது நெடுஞ்சாலையில் ரோந்து சென்ற சீர்காழி காவல் உதவி ஆய்வாளர் திரு.ராஜா¸ சிறுவனை பார்த்து அவனிடம் விசாரித்தபோது நடந்தவற்றை கூறியுள்ளான். பின்னர் அந்த சிறுவனை சீர்காழி காவல்நிலையம் அழைத்து வந்து அவனது பெற்றோர் முகவரியை கேட்டு அவர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.

அவனது தந்தை திரு.சாந்தமூர்த்தி¸ தாத்தா¸ மற்றும் உறவினர்கள் காவல்நிலையம் வந்தனர். சிறுவனுக்கு குளிர்பானம்¸ பிஸ்கெட்¸ பழங்களை வாங்கிதந்த போலீசார் அவனுக்கு அறிவுறை வழங்கி நோட்டு¸ பேனா¸ பென்சில் ஆகியவற்றையும் வழங்கி பெற்றோருடன் அனுப்பிவைத்தனர்.

Source: https://www.facebook.com/tnpoliceofficial

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …