ATM-ல் பணம் எடுப்பதுபோல் நடித்து வயதானவரின் பணத்தை அபகரித்த நபர் கைது


சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் பணம் எடுக்க ஏடிஎம் மையத்திற்கு சென்றபோது ஹெல்மெட் அணிந்து வந்த நபர் ஒருவர் முதியவருக்கு பணம் எடுக்க உதவி செய்வதுபோல் நடித்து, வங்கியில் பணம் இல்லை எனக் கூறி முதியவரிடம் போலி ஏடிஎம் கார்டை கொடுத்து, பணத்தை அபகரித்து சென்றதும், சிறிது நேரத்தில் முதியவரின் கைப்பேசிக்கு ரூ.50000 பணம் எடுத்தது போல் குறுஞ்செய்தி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து முதியவர் புகார் அளித்ததின் பேரில் காவல் உதவி ஆணையர் திரு. மகிமைவீரன் அவர்கள் மற்றும் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.அமுதா அவர்கள் அடங்கிய குழுவினர் முதியவரை ஏமாற்றிய நபரை CCTV மூலம் அடையாளம் கண்டு, அவரை கைது செய்தனர்.

மேலும் அவர் இது போன்று பல நபர்களை ஏமாற்றியது தெரிய வந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலி ஏடிஎம் கார்டுகள், இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

Source: https://www.facebook.com/tnpoliceofficial

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …