திரைப்பட படப்பிடிப்பினை துவங்குவதற்கு அனுமதி வழங்க மனு – தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள்


மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ அவர்களை இன்று (18.5.2020) சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆகியோர் சந்தித்தார்கள்.

தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள், ஏற்கனவே தாங்கள் அளித்த கோரிக்கையான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களும், சின்னத்திரை தயாரிப்பாளர்களும் Post production பணிகளை மேற்கொள்ளுவதற்கு அனுமதி வழங்க கோரியதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அனுமதி வழங்கியதற்கு தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்.

தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் அவர்களிடம் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்புக்கான அரசின் உத்திரவால் தமிழ்நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் திரைப்பட படப்பிடிப்பினை துவங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டுவது தொடர்பான மனுவினையும் அளித்தார்கள். மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் அவர்கள் இக்கோரிக்கையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனிவான கவனத்திற்கு எடுத்துச் சென்று ஆவன செய்வதாக தெரிவித்தார். இந்நிகழ்வில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.பிசின்னப்பன், திரைப்படத் தயாரிப்பாளர்கள் திரு. டி. சிவா, திரு.தேனப்பன், திரு. சுரேஷ் காமாட்சி, திரு.ஜி.தனஞ்சேயன், திரு.விடியல் ராஜ் நடிகர் மற்றும் தயாரிப்பாளர்களுமான திரு.மனோபாலா, திரு.ஜே.எஸ். கே. சதீஷ்குமார் மற்றும் திரு.ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் அவர்களிடம் கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கத்தில் ஊரடங்கில் தவிக்கும் மக்களுக்காக, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) வெவ்வேறு சங்கத்தின் சார்பாக தலா ரூ.50,000/வழங்கப்பட்டு, 20 சங்கங்களின் மூலமாக ரூ.10,00,000/- (ரூபாய் பத்து இலட்சம்) மற்றும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் 25 ஆயிரம் தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் ரூ.1/- வீதம் வழங்கிய நிதி ரூ.25,000/- என மொத்தம் ரூ.10,25,000/-த்திற்கான காசோலையினை தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர்

திரு.ஆர்.கே.செல்வமணி அவர்கள் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார்கள். அப்போது மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் அவர்கள், அவர்கள் வழங்கிய நிதி முதலமைச்சரின் பொது நிவாரண நிதி கணக்கில் சேர்க்கப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, திரைப்பட இயக்கு நா சுங்க செயலாளர் திரு. ஆர்.வி.உதயகுமார், பெப்சியின் துணைத் தலைவர் மற்றும் இசையமைப்பாளர் திரு. தினா மற்றும் பொதுச் செயலாளர் திரு.அங்கமுத்து சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் அவர்களிடம் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் திரு. ஆர்.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில், கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்புக்கான அரசின் உத்தரவால் தமிழ்நாட்டில் மூடப்பட்டிருக்கும் திரையரங்கங்களை திறக்க அனுமதி வழங்க வேண்டி மனுவினை அளித்தனர். மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் கோரிக்கை மனுவினை பெற்று இக்கோரிக்கையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனிவான கவனத்திற்கு எடுத்துச் சென்று ஆவன செய்வதாக தெரிவித்தார். இந்நிகழ்வில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளர் டாக்டர் எஸ்.ஹரிகோவிந்த் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த திரு.சப்பு, திரு. வெங்கடேஷ், திரு.மதி மற்றும் திரு.ரூபன் ஆகியோர் உடனிருந்தனர்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …