மதிப்பிற்குரிய கல்வி அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களுக்கு ஒரு உயர்நிலைப்பள்ளி ஆசிரியரது வேண்டுகோள்.


  • *பணிக்கு வந்து 12 ஆண்டுகளில் ஒரு முறை கூட இது போன்ற சூழலை ஆசிரியர்களோ, மாணவர்களோ சந்தித்ததில்லை. இவ்வளவு ஏன் உங்கள் அரசியல் வாழ்வில் எந்த அரசும் பார்த்ததில்லை.*
  • *இந்தியாவிலேயே கல்விக்கு அதிகமான தொகையை வரவு செலவு திட்டத்தில் ஒதுக்குவது உங்களால் தான், புதிய பாடபுத்தகம் QR கோடு உடன், ICT பயன்பாடு, சீருடை, என ஒவ்வொன்றும் சச்சினின் சதம் போல உயர்ந்து கொண்டே வந்தது.*
  • *உலகம் முழுவதும் பெரும் தொற்றால் போராடும் போதும், இந்தியாவில் இலட்சத்தை நெருங்கும் போதும், தமிழகம் 10000 ஐ தாண்டும் போது நீங்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை இவ்வளவு தீவிரமாக நடத்த முயல்வது ஏன்?*
    *குழந்தைகள் 55 நாட்களாக பள்ளி வராமல் உள்ளனர். இது வழக்கமான விடுமுறை அல்ல. 144 ன் கீழ் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டிய சூழல். இருந்த பணம் 10 நாள் கூட குடும்பத்திற்கு உதவவில்லை. அரசு குடுத்த இலவச அரிசி தான் இதுவரை சோறு போடுகிறது.*
  • *சத்தியமாய் ஒரு நாள் கூட என் குழந்தைகள் புத்தகம் எடுக்கவேயில்லை. தொலைபேசியில் பேசியும், நேரில் வீட்டிற்கு கேட்ட போதும் பெற்றோரின் பதிலும் அவன் படிக்கலை சார் என்பதே. பள்ளிக்கூடத்திற்கு கூட்டிட்டு போயி படிக்க வையுங்க என்னும் பெற்றோருக்கு பதில் சொல்ல முடியாமல் திரும்ப வந்திட்டேன்.*
  • *ஜூன் 1 ஆம் தேதி பள்ளி திறங்கள். பத்தாம் வகுப்பு குழந்தைகள் பள்ளி வரட்டும். ஒரு 10 நாள் எங்களோடு குழந்தைகளை விடுங்கள். சற்று எழுத்துப் பயிற்சி கொடுத்துக்கொள்கிறோம். மறந்து போனவற்றை மலரச் செய்து விடுகிறோம். பொதுத்தேர்வு குறித்த அச்சத்தை அகற்றிவிடுகிறோம். ஜூன் 2 வது வாரத்திற்கு பிறகு எப்போது வேண்டும் என்றாலும் தேர்வு வையுங்கள். என் குழந்தைகள் தயார் தான்.*
  • *பாடம் நடத்துவது மட்டும் ஒரு ஆசிரியரின் வேலை அல்ல. அவனின் வெற்றியே எங்கள் வெற்றி. எந்த ஒரு காரணத்தாலும் அவன் படிப்பு இடைநிற்றல் ஆகி விடாமல் வீடு வீடாக சென்று அழைத்து வந்த எனக்கு, அவன் சரியான முறையில் தேர்வு எழுத வேண்டும் எனும் அக்கறையும், பொறுப்பும் உள்ளது.*
  • *15 நாள் தள்ளி வைப்பதால் பெரிய பாதிப்பு எதுவும் நடந்துவிடாது. அடுத்த கல்வியாண்டு சற்று தாமதம் ஆனாலும், அடுத்த கல்வியாண்டில் கடுமையாக உழைக்க நாங்கள் உள்ளோம். எங்களால் உங்களது துறை எப்போதும் முதலிடத்திலேயே தான் இருக்கும். 15 நாள் தள்ளி வைத்து பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், பல இலட்சம் மாணவர்களின் மனதிற்கு மகிழ்ச்சியைத் தாருங்கள் மாண்புமிகு அமைச்சரே.

Source: Watsapp, Facebook

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …