எதிர் கட்சி தலைவர், தமிழகத்தில் பரிசோதனை செய்வதே இல்லை என்று பொய் பிரச்சாரம் செய்கிறார்- அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு…


தலைமை செயலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழகத்தில் மேலும் 536 பேருக்குக் கொரோனா பாதிப்பு.
சென்னையில் ஒரேநாளில் 364 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.

தமிழகத்தில் கொரோனாவிற்கு மேலும் 3 பேர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் பூரண பாதிப்பில் இருந்து இதுவரை 4406 குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.

எதிர் கட்சி தலைவர் தமிழகத்தில் பரிசோதனை செய்வதே இல்லை என்று பொய் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறான கருத்து,
தமிழகத்தில் இன்றைய தினத்தில் 3,37, 841 நபர்கள் சோதனை செய்து உள்ளனர். இதில் 3,25,546 நபர்களுக்கு நோய் தொற்று அறிகுறிகள் இல்லை. இந்த பரிசோதனை 39 அரசு மருத்துவமனையிலும் 22 தனியார் சோதனை நிறுவனங்களில் நடைபெற்றது.

சென்னையில் மட்டுமே 85000 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றார். பொது மக்கள் கரோனா வைரஸ் தொற்று குறித்து அச்சப்படத் தேவை இல்லை. தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தற்போது நமக்கு சவாலாக இருப்பது, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் மக்களால் தொற்று பரவும் அபாயம் இருக்கின்றது என்றார்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …