அதிமுகவில் புதிதாக நியமிக்கப்பட்ட கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டலச் செயலாளர்கள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


அண்மையில் அதிமுக தலைமைக் கழகம் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டலச் செயலாளர்களை நியமித்தது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ் நாடு துணை முதலமைச்சருமான
ஓ. பன்னீர்செல்வம் அவர்களை கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டலச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள, சென்னை மண்டலம் திரு. அஸ்பயர் மு. சுவாமிநாதன், வேலூர் மண்டலம் திரு. ஆ. கோவை சத்யன், கோவை மண்டலம் திரு. சிங்கை. ழு. ராமச்சந்திரன், மதுரை மண்டலம் திரு. V.V.R.. ராஜ் சத்யன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


முன்னதாக இவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து வாழ்த்து பெற்றனர்.