காவிரி டெல்டா மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளை துரிதப்படுத்துவதற்காக சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு ஆணை

தூர்வாரும் பணிகளை கண்காணிப்பதற்காக சிறப்பு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது*

காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ரூ.67 கோடியே 24 லட்சத்து 75 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 392 பணிகள் மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளை கண்காணிப்பதற்காகவும், அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து பணிகளை துரிதப்படுத்துவதற்காகவும், மாவட்ட வாரியாக மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி தஞ்சை மாவட்டத்துக்கு ககன் தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ்,

திருவாரூர் மாவட்டத்துக்கு ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ்
,
நாகை மாவட்டத்துக்கு சந்திரமோகன் ஐ.ஏ.எஸ்

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அபூர்வா ஐ.ஏ.எஸ்

கரூர் மாவட்டத்துக்கு கோபால் ஐ.ஏ.எஸ்

திருச்சி மாவட்டத்துக்கு கார்த்திக் ஐ.ஏ.எஸ்

அரியலூர் மாவட்டத்துக்கு விஜய்ராஜ் குமார் ஐ.ஏ.எஸ்

உள்ளிட்டோர் சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அதிகாரிகள் அனைவரும் உடனடியாக தங்கள் பொறுப்புகளை ஏற்க வேண்டும் என அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறப்பு அதிகாரிகள் தங்கள் பணிகள் தொடர்பான அறிக்கையை தலைமை செயலாளருக்கும், முதலமைச்சர் அலுவலகத்துக்கும் சமர்பிக்க அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுப்படிக்காக தண்ணீர் திறந்துவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்கள், ஆறுகள், வடிகால்களை தூர்வாரி தயார் நிலையில் வைத்திருக்கும் பொருட்டு சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …