ஊரடங்கால் அச்சு ஊடகங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகள் குறித்து தமிழக பாஜக தலைவருடன் செய்தித்தாள் நிறுவனர்கள் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை செய்தித்தாள் நிறுவனத்தினர் சந்தித்துப்சந்திப்பில் ஊரடங்கால் அச்சு ஊடகங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகள் குறித்து பேசினர்.

இந்த சந்திப்பில் பிரதமர் மோடியிடம் அச்சு காகிதத்துக்கான சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும், மத்திய, மாநிலஅரசுகளின் விளம்பர நிலுவைத் தொகையை உடனே வழங்கவேண்டும், அரசு விளம்பரங்களுக்கான கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட அச்சு ஊடகத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை பிரதமரிடம் தெரிவிக்கப்படும் என்று பாஜாக தலைவர் முருகன் தெரிவித்தார்.

இதற்கு முன்பாக முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டபல்வேறு கட்சித் தலைவர்களை ‘தி இந்து’ குழும இயக்குநர் என்.ராம், ‘கல்’ பப்ளிகேஷன்ஸ் (தினகரன்) மேலாண் இயக்குநர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ்,கோவை தினமலர் பதிப்பாளர் எல்.ஆதிமூலம் ஆகியோர் சந்தித்து கரோனா ஊரடங்கால் அச்சு ஊடகங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகள் குறித்து பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …