உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக டாக்டர்.ஹர்ஷவர்தன் தேர்வு


மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷவர்தன், 2020-2021-ஆம் ஆண்டுக்கான உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று மெய்நிகர் முறையில் நடைபெற்ற நிர்வாக வாரியத்தின் 147-வது அமர்வில் ஜப்பானின் டாக்டர். ஹிரோகி நகாடானிக்குப் பதிலாக அவர் தேர்வு செய்யப்பட்டார்.

நிர்வாக வாரியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட டாக்டர். ஹர்ஷவர்தன், உலகப் பெருந்தொற்றான கொவிட்-19 பாதிப்பால் உயிரிழந்த லட்சக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். கொவிட் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கும், இதர கொவிட் வீரர்களுக்கும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனைவரும் எழுந்து நின்று பாராட்டு தெரிவிப்பதுடன்,அவர்களது கண்ணியம், உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்புக்கு தலைவணங்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
 

‘’ உங்கள் அனைவரது நம்பிக்கையால் நான் பெரிதும் கவுரவிக்கப்பட்டதாக  உணர்கிறேன். எங்களுக்கு அளித்துள்ள இந்தக் கவுரவம் குறித்து இந்தியாவும், எனது நாட்டு மக்களும் பெருமித உணர்வு கொள்கின்றனர்’’ என்று அவர் கூறினார். கொவிட் பரவல் மனிதகுலத்துக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரும் சோகம் என்று தெரிவித்த அவர், அடுத்த 20 ஆண்டுகளில் இது போன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றார்.  ‘’இந்த அனைத்து சவால்களும் ஒருங்கிணைந்த முயற்சியின் அவசியத்தை ஏற்படுத்தியுள்ளன. ஏனெனில், ஒருமித்த அச்சுறுத்தல்களுக்கு ஒன்றுபட்ட பொறுப்பு தேவையாகும்’’ என்று அவர் கூறினார். ‘’உலக சுகாதார அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் கூட்டணியின் முக்கிய தத்துவமாக இது உள்ளது. இருப்பினும் இதற்கு நாடுகளின் ஒருங்கிணைந்த உயர்ந்த லட்சியம் தேவைப்படுகிறது ‘’ என்று அவர் மேலும் தெரிவித்தார். ‘’நமது சுகாதார முறைகளின் முன்னேற்பாடுகள் மற்றும் வலுப்படுத்துதலைப் புறக்கணித்தால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு இந்தப் பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற உலக அளவிலான நெருக்கடி நிலையில், அபாய மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த உலகக் கூட்டுறவு அவசியமாகும். இதன் மூலம் உலகப் பொது சுகாதாரத்தில் முதலீட்டை அதிகரித்து அதற்கு புத்துயிர் ஊட்ட வேண்டும்’’ என்று அவர் கூறினார்.

கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் அனுபவங்களை டாக்டர்.ஹர்ஷவர்தன் பகிர்ந்து கொண்டார். ‘’ இந்தியாவில் இறப்பு விகிதம் 3 சதவீதமாக மட்டுமே உள்ளது. 135 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில், ஒரு லட்சம் பேர் மட்டுமே கொவிட்-19-ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமானவர்கள் விகிதம் 40 சதவீதத்துக்கும் அதிகமாகும். இருமடங்காகும் விகிதம் 13 நாட்கள்’’ என்று அவர் தெரிவித்தார்.

பல நூற்றாண்டுகளாக மனித குலத்தைப் பாதித்து வரும் நோய்களைத் தடுக்க உயரிய ஈடுபாட்டு உணர்வு அவசியம் என்று உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தின் புதிய தலைவர் என்ற முறையில் டாக்டர்.ஹர்ஷவர்தன் வலியுறுத்தினார். உலக ஆதாரங்களைத் திரட்ட ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க வேண்டும், நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்க தீவிர வழி வகைகள் தேவையாகும்.  உலக அளவில் மருந்து, தடுப்பு ஊசி பற்றாக்குறையைப் போக்க சீர்திருத்தங்கள் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். ‘’உறுப்பு நாடுகளும், தொடர்புடைய இதர பிரிவினரும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள நிலையான ஈடுபாட்டை  நிச்சயம் அளிப்பார்கள் என நான் கருதுகிறேன். இதன் மூலம், நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடையும் வகையில் முன்னேற்றத்தை ஊக்குவிக்க முன்வருவார்கள். மேலும், ஆக்கபூர்வமாக செயல்பட்டும், ஆதாரங்களைப் பயன்படுத்தியும் உலகத்தின் சுகாதார முயற்சி இலக்குகளைத் திறம்பட எட்டமுடியும். நமது இந்த அமைப்பின் கூட்டு நோக்கத்தை நிறைவேற்றவும், நமது அனைத்து உறுப்பு நாடுகளின் கூட்டுச் செயல்திறனைக் கட்டமைக்கவும், கூட்டுத் தலைமையை உருவாக்கவும் நான் பணியாற்றுவேன்’’ என்று அவர் கூறினார்.

DR. HARSH VARDHAN ELECTED AS CHAIR OF EXECUTIVE BOARD OF WHO

“Health is central to economic performance and to enhancing human capabilities”

I am committed to working for efficient, effective and responsive discharge of public health obligations: Dr Harsh Vardhan

The Union Minister of Health & Family Welfare Dr. Harsh Vardhan has been elected as Chair of the Executive Board of World Health Organization for the year 2020-21. This took place today during the 147th session of the Executive Board, in a meeting that was virtually held.Hehas replacedDr Hiroki Nakatani of Japan.

Accepting the Chair of the Executive Board, Dr Harsh Vardhan paid tribute to the lakhs of people who have lost their lives due to the global COVID-19 pandemic.He requested all dignitaries present on the ocassionto give a standing ovation to all the frontline health workers and other COVID Warriors by saluting their dignity, determination and dedication.

“I feel deeply honoured to have the trust and faith of all of you. India, and all my countrymen, too, feel privileged that this honour has been bestowed upon us”, he stated. Acknowledging that this is agreat human tragedy and the next two decades may see many such challenges, he stated that “All these challenges demand a shared response, because these are shared threats requiring a shared responsibility to act.”He further added that “while this is the core philosophy of our alliance of member nations thatcomprise WHO, however, it needs a greater degree of shared idealism of nations.” He said that, “The pandemic has made humanity acutely aware of the consequences of ignoring the strengthening and preparedness of our healthcare systems. In such times of global crisis, both risk management and mitigation would require further strengthening of global partnerships to re-energize interest and investment in global public health.”

Dr Harsh Vardhan also shared India’s experience of combating COVID-19. He noted that “We have a mortality of 3 per cent only. In a country of 1.35 billion, there are only 0.1 million cases of COVID19. The recovery rate is above 40 per cent and the doubling rate is 13 days.”

As the new Chair of the Executive Board of WHO, Dr Harsh Vardhan underlinedthe need for higher commitments in respect of diseases that have plagued humankind for centuries, collaborations for supplementing each other by pooling of global resources, an aggressive roadmap to curtail deaths from diseases that can be eliminated, a fresh roadmap to address global shortages of medicines and vaccines and the need for reforms. “I am sure that constant engagement with member states and other stakeholders will reinforce reforms and help accelerate progress towards achieving sustainable development goals and universal health coverage with the most productive, efficient and targeted utilization of resources. I will put myself to work to realise the collective vision of our organisation, to build the collective capacity of all our member nations and also build a heroic collective leadership”, he stated.

Dr Harsh Vardhan stated that WHO believes in the principle that the enjoyment of the highest attainable standard of health is one of the fundamental rights of every human being without distinction of race, religion, political belief, economic or social condition. “We, therefore, commit to work with the Member States; the Organization and the global community of partners for the efficient, effective and responsive discharge of public health obligations”, he added.

Dr Harsh Vardhan while taking charge as the Chair of the EB also shared his thoughts on the future health scenario of the world. “I believe that health is central to economic performance and to enhancing human capabilities. However, public health policy must be based and guided on a proper understanding of nature. This is also the underlying principle of the Indian traditional systems of medicine based on holistic health and wellness, which I have lived and experienced”, he said. He also outlined the policy of India towards ‘Universal Health for All’ through national flagships programmes such as Ayushman Bharat with its twin pillars of Health & Wellness centres (HWCs) and Pradhan Mantri Jan Arogya Yojana (PMJAY), being led by the dynamic and visionary Prime Minister Mr Narendra Modi.

Reminiscing about his long standing association with WHO, he expressed his gratitude for the strong support of WHO in India’s fight against Polio. “If it had not been for the support and morale boosting by friends in WHO, I would not have achieved what I did. If, today, Polio stands eradicated from India, I must admit it could never have been possible without the perseverance of WHO”, he stated.

Dr Harsh Vardhan has also been a member of several prestigious committees of WHO like Strategic Advisory Group of Experts (SAGE) and the Global Technical Consultative Group (TCG) on Polio Eradication. He has also served as an Advisor to the WHO.

The Executive Board of WHO is composed of 34 technically qualified members elected for three-year term. The main functions of the Board are to implement the decisions and policies of the Health Assembly, and advise and facilitate its work.

This is another feather in the cap of Dr. Harsh Vardhan’s illustrious career. He earned his graduation and post-graduation in medicine from G.S.V.M. Medical College, Kanpur in 1979 and 1983, respectively. He has been associated with public service since 1993 when he was elected to the Delhi Legislative Assembly. He served his constituency continuously for five terms until he was elected to the 16th Lok Sabha in May, 2014 from Chandni Chowk constituency. From 1993 to 1998, he served as the Minister of Health, Education, Law & Justice & Legislative Affairs for the Govt. of NCT of Delhi.In 1994, as the Delhi Health Minister, he oversaw the successful implementation of the pilot project of the Pulse Polio Programme which involved the mass immunisation of 1.2 million children up to the age of 3 in Delhi, laying the groundwork for a Polio free India in 2014. He has championed the passing and implementation of the Delhi Prohibition of Smoking and Non-Smokers Health Protection Act, 1997, which was later replicated by several States in the country.

Dr Harsh Vardhan has been the Union Health Minister in 2014, and latertook over as the Union Minister Science & Technology and Earth Sciences. He was also Union Minister for Environment, Forest and Climate Change. He was re-elected to the 17th Lok Sabha and sworn in on May 30th, 2019 asUnion Cabinet Minister and was given the portfolios of Health and Family Welfare; Science and Technology and Earth Sciences.

Source: Press Information Bureau – Govt. of India

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …