சென்னை அருகில் உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் அதிக அளவில் விற்பனை.


கரோனா தொற்று காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று முதல் ஜுன் 30 தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் ஜுன் 30 வரை இப்பகுதியில் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும்.

இதன் காரணமாக சென்னை மாவட்ட எல்லையில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று அதிக அளவில் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சென்னை அருகில் உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் அதிக அளவில் மது பிரியர்கள் மதுவை வாங்கி சென்றனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் நேற்று மட்டும் ரூ. 33 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.

இன்று முதல் ஊரடங்கு அமலான நிலையில் நேற்று விற்பனை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.