உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று- தகவல்.


தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் என்ற தகவலுக்கு அமைச்சர் அன்பழகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு சாதாரண காய்ச்சல் காரணமாக மருத்துவமனை சென்று வந்ததாகவும், தற்போது நலமுடன் இருப்பதாகவும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எதிர் கட்சி திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசியில் அமைச்சரிடம் நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.