நியாய விலை கடைப் பணியாளர்களுக்கு ஒருமுறை ஊக்கத்தொகையாக 2500 வழங்கப்படும்- கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை.


தமிழ்நாடு முதலமைச்சர் பெருநகர சென்னை மாநகராட்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு முழு ஊரடங்கு 19.06.2020 முதல் 30.06.2020 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்த அரிசி பெறும் 21.83 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.218 கோடியே 35 இலட்சம் மதிப்பில் தலா ரூ.1,000/- ரொக்கம் அவர்களின் இல்லத்திற்கே சென்று வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்.
இப்பணியினையும் துறை அலுவலர்கள், ஊழியர்கள் எவ்வித தொய்வுமின்றி வழங்கவுள்ளார்கள்.


இப்பணியில் ஈடுபடும் நியாயவிலைக்கடைப் பணியாளர்களுக்கு, ஒருமுறை ஊக்கத்தொகையாக விற்பனையாளர்களுக்கு ரூ.2500/-ம் கட்டுநர்களுக்கு ரூ.2000/- அனுமதித்து அரசு ஆணையிட்டுள்ளது.
பொதுமுடக்கத்தினால் போக்குவரத்து வசதி இல்லாத நேரங்களில் அத்தியாவசியப்பொருள்களின் விநியோக சேவை பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில், பொது விநியோகத்திட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு தினசரி போக்குவரத்து செலவினமாக ரூ.200/- அனுமதித்து ஆணையிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.


கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டிலுள்ள நியாயவிலைக்கடைப் பணியாளர்களுக்கு சம்பள விகித மாற்றம் செய்து உயர்த்தி வழங்கப்பட்டு சங்கங்களில் பணிபுரியும் நியாயவிலைக்கடைப் பணியாளர்கள் பயன்பெற்றுள்ளனர்.
கொரோனா காலத்தில் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள அனைத்து பொதுவிநியோகத்திட்டப்பணியாளர்களுக்கும், போதிய முகக்கவசம், கையுறைகள், கிருமி நாசினிகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.


கொரோனா தொற்று காலத்தில், அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கும் பணியில் ஈடுபடுகையில், தொற்றின் காரணமாக பாதிக்கப்படும் பொதுவிநியோகத்திட்ட பணியாளர்களுக்கு அரசின் நிதியுதவிகளைப் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மேலும் ஏப்ரல், மே, ஜூன் மாதத்திற்கு இலவசமாக அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …