கோவிட் பரிசோதனைக்கு DBT – AMTZ நடமாடும் பரிசோதனைக் கூடத்தை டாக்டர் ஹர்ஷ் வர்தன் தொடங்கி வைத்தார் – ஐ-பரிசோதனைக்கூடம்


‘‘நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கு DBT (உயிரி தொழில்நுட்ப துறை) பரிசோதனை மையங்கள் மூலமாக இந்த நடமாடும் பரிசோதனைக்கூடம் அனுப்பப்படும்’’: டாக்டர் ஹர்ஷ் வர்தன்

இந்த ஐ-பரிசோதனைக்கூடத்தை DBT ஆதரவுடன் ஆந்திரப்பிரதேச மருத்துவ தொழில்நுட்ப குழு, 8 நாளில் உருவாக்கி சாதனை படைத்துள்ளது

இந்த நடமாடும் பரிசோதனைக் கூடத்தில் உயிரிபாதுகாப்பு வசதி மற்றும் RT-PCR, ELISA பரிசோதனைகளை மேற்கொள்ளும் திறன் உள்ளது

இந்தியாவின் ஊரக மற்றும் எளிதில் செல்ல முடியாத இடங்களில் கோவிட் பரிசோதனை செய்யும் நாட்டின் முதல் ஐ-பரிசோதனைக்கூடத்தை  (தொற்றுநோய் பரிசோதனை மையம்) மத்திய அறிவியல் & தொழில்நுட்ப, புவி அறிவியியல் மற்றும் சுகாதார & குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், உயிரி தொழில்நுட்பத்துறை செயலாளர் டாக்டர். ரேணு ஸ்வரூப் மற்றும் இதர அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆந்திர மருத்துவ தொழில்நுட்ப மண்டல தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர். ஜித்தேந்தர் ஷர்மா மற்றும் நிதி ஆயோக், மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை, மருத்துவ தொழில்நுட்ப குழு, இதர அமைச்சகங்கள், ஐசிஎம்ஆர், டிஎஸ்டி, சிஎஸ்ஐஆர் அதிகாரிகளும் மெய்நிகர் நிகழ்ச்சி மூலம் கலந்து கொண்டனர்.


     இந்தநடமாடும் ஐ-பரிசோதனைக் கூடத்தை தொடங்கி வைப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த டாக்டர்.ஹர்ஷ் வர்தன், இந்தியாவின் ஊரகப் பகுதிகளுக்கு இந்த பரிசோதனை வசதியை அர்பணித்தார். நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் கோவிட் பரிசோதனைக்கு DBT பரிசோதனை மையங்கள் மூலமாக இந்த நடமாடும் பரிசோதனைக் கூடம் அனுப்பி வைக்கப்படும். கோவிட் தொற்றை எதிர்கொள்வதில் DBT-ன் முயற்சிகளை பாராட்டி அவர் வாழ்த்து தெரிவித்தார். ஒரு இடத்தில் முன்னணி பரிசோதனைக் கூடங்களை, கோவிட் பரிசோதனைக் கூடங்களாக சீரமைத்து, கோவிட் பரிசோதனை அளவை அதிகரித்ததில் DBT மையங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டதாகவும் அவர் கூறினார். நாட்டில் தற்போது 100 பரிசோதனைக் கூடங்களுடன் 20 மையங்கள் உள்ளன. இங்கு 2,60,000 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாவும் அவர் கூறினார்.

‘‘இது, DBT மற்றும் கோவிட் மருத்து தொழில்நுட்ப உற்பத்தி மேம்பாட்டு அமைப்பு  DBT-AMTZ COVID Command Consortia (COVID Medtech Manufacturing Development] Consortia)” மூலம் சாத்தியமானது எனவும், இதன் மூலம் நாட்டின் தற்போதைய சூழ்நிலையை சமாளித்து தன்னிறைவு நோக்கி செல்ல முடிகிறது. இந்த ஐ-பரிசோதனை கூடங்கள், நாட்டின் தொலை தூர மற்றும் மிக தொலை தூரப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.’’ என டாக்டர்.ஹர்ஷ் வர்தன் கூறினார். ‘‘இந்த தனிச்சிறப்பான, புதுமையான வசதியை முடக்க காலத்தில் ஆந்திர மருத்துவ தொழில்நுட்ப மண்டல குழுவினர் தங்களின் அயராத, அர்பணிப்பான, உறுதியான முயற்சிகள் மூலம் கொண்டு வந்துள்ளனர்’’ என அமைச்சர் பாராட்டினார். 

ஆரம்பத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பரிசோதனை உபகரணங்களை எல்லாம் DBT ஆதரவுடன் AMTZ குழு உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கும் வசதியை ஏற்படுத்தியதாகவும், இது பிரதமரின் தொலை நோக்கான இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்தை உணரவைத்ததாகவும் அவர் தெரிவித்தார். இன்று நாட்டின் பல பகுதிகளில் 953 பரிசோதனைக் கூடங்கள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், உள்நாட்டு தொழி்ல்நுட்பத்தில் ஆராய்ச்சி மற்றும் உபகரணங்கள் உற்பத்திக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பல நடவடிக்கைகள் எடுத்துள்ளதையும் விளக்கினார். ‘‘எதிர்காலத்தில், அனைத்து ஒருங்கிணைந்த முயற்சிகளுடன், சுகாதார தொழில்நுட்பத்த்தில் இந்தியா தன்னிறைவு பெற்று சுயசார்பு இந்தியாவை நோக்கி செல்லும்’’ என டாக்டர் ஹர்ஸ் வர்தன் வலியுறுத்தினார். 

இந்திய விஞ்ஞானிகளின் தீவிர முயற்சிகள் மூலமாக, நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பரிசோதனை உபகரணங்களை தாயாரிக்கும் திறனை நாடு அடைந்துள்ளதாகவும், இது மே 31, 2020ம் தேதிக்குள்  ஒரு லட்சம் பரிசோதனை உபகரணங்கள் தயாரிக்கும் இலக்கை தாண்டிவிட்டதாகவும் இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர். ரணு ஸ்வரூப் தெரிவித்தார்.

பொதுத்துறை நிறுவனமான BIRAC அமல்படுத்தும் தேசிய பயோபார்மா திட்டத்தின் கீழ் DBT ஆதரவுடன், ஆந்திரப்பிரதேச மருத்துவ-தொழில்நுட்ப குழுவினர் 8 நாளில் ஐ-பரிசோதனை கூடத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த பரிசோதனைக் கூடத்தில் உயிரி பாதுகாப்பு வசதி மற்றும் RT-PCR, ELISA பரிசோதனைகள் செய்யும் திறன் உள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

DBT-AMTZ கட்டுப்பாடு

நாட்டின் சுகாதார தொழில்நுட்ப பற்றாக்குறை பிரச்னையை போக்க  உயிரி தொழில்நுட்பதுறை (DBT), அறிவியல் மற்றும்  தொழில்நுட்ப துறை அமைச்சகம், ஆந்திரப்பிரதேசத்தின் மருத்துவ தொழில்நுட்ப குழு (AMTZ) ஆகியவை DBT-AMTZ கட்டுப்பாட்டு மையத்தைத் தொடங்கி, தன்னிறைவு என்ற நிலையை நோக்கி முன்னேறியது.

இந்த அமைப்பின் கீழ், இந்தியாவின் முதல் ஐ-பரிசோதனை கூடம், 8 நாளில் ஆந்திர மருத்துவ தொழில்நுட்ப மண்டலத்தில் உருவாக்கி சாதனை படைக்கப்பட்டது. இதற்காக பாரத் பென்ஸ் நிறுவனத்திடம் இருந்த வாகனம் வாங்கப்பட்டது. இது உயிரிபாதுகாப்பு வசதியுடன் கூடிய நடமாடும் பரிசோதனைக்கூடம்.  இந்த ஐ-பரிசோதனைக்கூடத்தில் BSL-2 வசதி உள்ளது. இதில் ELISA, RT-PCR, உயரி வேதியியல் பரிசோதனை மேற்கொள்ள முடியும். இதில் ஒரு நாளைக்கு 50 RT-PCR, 200 ELSA பரிசோதனைகள் மேற்கொள்ள முடியும். இரட்டை இயந்திரங்கள் உதவியுடன், இதன் பரிசோதனைத் திறனை 8 மணி நேரப் பணியில் ஒரு நாளைக்கு 500 ஆக உயர்த்த முடியும்.

இதை தொலைதூரப் பகுதிகளுக்கு அனுப்ப முடியும். வாகனத்தில் இருந்து இறக்கி, சரக்கு ரயிலில் ஏற்றி நாட்டின் எந்த பகுதிக்கும் அனுப்ப முடியும். BSl-2 பரிசோதனைக் கூடம் NABL விவரகுறிப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் DBT அங்கீகரித்த பரிசோதனைக் கூடங்களுடன் இணைக்கப்படுகிறது.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் உள்ள உயிரி தொழில்நுட்பத் துறை, இந்தியாவில் உயிரி தொழில்நுட்ப வளர்ச்சியை, வேளாண், சுகாதாரத்துறை, விலங்கு அறிவியல், சுற்றுச்சூழல் மற்றும் தொழில்துறையில்  ஊக்குவிக்கிறது.

AMTZ ஆசியாவின் முதல் மருத்துவ உபகரண உற்பத்தி மையம். இது மருத்துவ தொழில்நுட்பத்துக்காக தனிச்சிறப்பாக அர்பணிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல அமைச்சகங்கள் ஆதரவு அளிக்கின்றன. 

தொற்று நோய் பரிசோதனை மையம் (ஐ-பரிசோதனைக் கூடம்)

* இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் பரிசோதனையை மேம்படுத்த, கோவிட்-கட்டுப்பாடு யுக்தியின் கீழ், AMTZ மூலமாக நடமாடும் பரிசோதனைக்கூடங்களை உருவாக்க DBT ஆதரவு அளிக்கிறது.

* கோவிட் தொற்றுக்குப் பின்பும், இந்த நடமாடும் பரிசோதனைக் கூடத்தை இதர தொற்று நோய்களின் பரிசோதனைக்கு பயன்படுத்த முடியும்.

சிறப்பம்சங்கள்

* தானியங்கி வாகனம், பரிசோதனை உபகரணம், சுத்தமான அறை, BSL-2 பரிசோதனைக் கூடம், உயிரி-பாதுகாப்பு அறைகள்.

* நாள் ஒன்றுக்கு ஒரு ஐ-பரிசோதனை கூடத்தில் 25 பரிசோதனைகள் (RT-PCR)

* நாள் ஒன்றுக்கு 300 ELISA பரிசோதனைகள்

* டி.பி, எச்.ஐ.வி மற்றும் இதர நோய்களுக்கும் கூடுதல் பரிசோதனைகள் செய்யலாம். CGHS கட்டணப்படி வசூலிக்கப்படும்.

அனுப்புதல்

* முதல் ஐ-பரிசோதனைக் கூடம் புதுதில்லியில் ஜூன் 18, 2020-ம் தேதி அன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஸ் வர்தனால் தொடங்கப்பட்டது.

* மண்டல/நகர மையங்களுக்கு இந்த பரிசோதனைக் கூடங்கள் வழங்கப்படும் மற்றும் இந்த நடமாடும் பரிசோதனைக் கூடங்கள், தொலைதூரப் பகுதிகள் மற்றும் செல்ல முடியாத பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Source: Press Information Bureau – Govt. of India

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …