இந்திய அரசு மற்றும் நமது பாதுகாப்பு படைகளுக்கு பின்னால் தமிழகமும் மற்றும் அதிமுக உறுதியாக என்றும் நிற்கும்- துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்…


பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காணொலி காட்சி மூலம் இந்திய சீன எல்லை பிரச்சினை தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அ.இ.அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.

அப்போது ஓ. பன்னீர்செல்வம் ஆற்றிய உரை.

லடாக்கில் இந்திய-சீன, உண்மையான கட்டுப்பாட்டு எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதிக்க இந்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியதற்காக பிரதமர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். இது மிகவும் சரியான மற்றும் அவசியமான கூட்டமாகும். நாட்டிலுள்ள அனைவரும் இந்திய அரசாங்கத்தின் பின்னால், நமது நாட்டின் எல்லைகளையும், நமது தேசத்தையும் பாதுகாக்க, நாம் அனைவரும் ஒற்றுமையாக நிற்கிறோம் என்பதை நிரூபிக்க நம் அனைவருக்கும் கிடைத்த ஒரு வாய்ப்பாகும், லடாக்கின் எல்லைப் பகுதியில், தேசத்துக்காக போராடும் போது, வாழும் சூழ்நிலை அற்ற நிலப்பரப்பில், எல்லைப் பகுதியில், தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த துணிச்சலான 20 இந்திய வீரர்களுக்கு என் வீர வணக்கத்தை இச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொண்டார்.

பிரதமர், குறிப்பாக கடினமான ஒரு நேரத்தில் நாட்டை வழி நடத்திக் கொண்டிருக்கிறார். COVID-19 தொற்று நோயை எதிர்கொண்டுள்ள நேரத்தில் தேசத்தை அமைதியாக வழிநடத்துகிற மெச்சத்தகுந்த தலைமையினை ஏற்றுள்ள, பாரதப் பிரதமருக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

முன் எப்போதும் இல்லாத நெருக்கடியாக, COVID-19 தொற்று நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் நமது நாடு ஒருபக்கம் ஈடுபட்டிருக்கும் போது மறு பக்கம் சீன தரப்பினரின் கடுமையான நடவடிக்கைகள் காரணமாக நாடு ஒரு புதிய சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது. நமது நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில், பாரதப் பிரதமர், இந்திய அரசு மற்றும் நமது பாதுகாப்பு படைகளுக்கு பின்னால் தமிழகமும் மற்றும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் உறுதியாக நிற்கின்றன. இந்தியாவின் எல்லைப்பகுதியில் ஒரு அங்குலம்
ஒருபோதும் யாருக்கும் விட்டுக்கொடுக்கப்படாது. எங்களது மதிப்பிற்குரிய தலைவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தியதுபோல, நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு எந்த நிலையிலும் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த அம்சத்தில் எந்த சமரசமும் இருக்க முடியாது, சமீபத்தில் இறந்த 20 இராணுவ வீரர்களில் ஒருவர், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தியாகி, ஹவில்தார் பழனி தமிழகத்தைச் சேர்ந்தவர்.

இந்த மாவட்டம் நம் நாட்டின் தென்முனைக்கு அருகில் உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான ஒவ்வொரு இந்தியரும் நாட்டைப் பாதுகாப்பார்கள், மிகச்சிறந்த தியாகம் செய்யத் தயாராக இருப்பார்கள் என்பதையே இவ்வீரரின் மறைவு சரியாக நிரூபிக்கிறது. அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் போர் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது சொந்த நகைகளை தாராளமாக நன்கொடையாக வழங்கியதை, இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

பாரதப் பிரதமர் இந்த நெருக்கடியான நிலைமையைக் கையாள்வதில் மிகுந்த புத்திசாலித்தனத்தையும் உறுதியையும் வெளிப்படுத்தியுள்ளார். பாரதப் பிரதமர், இந்திய அரசு மற்றும் நமது பாதுகாப்புப் படைகள் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழு ஆதரவளிக்கிறோம். இந்த நெருக்கடியை எதிர்கொள்வதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் மிகுந்த துணிச்சலுடன் செயல்பட்டு வருகிறார்.

பிரதமரின் புத்திசாலித்தனமான மற்றும் ஊக்கமளிக்கும் தலைமையின் கீழ் நமது நாடு, தொற்று நோயால் ஏற்படும் சவால்களை மட்டுமல்ல, நம்முடைய எதிரிகள், எவருடைய முயற்சிகளையும் நிச்சயமாக வெல்லும் என்று நான் உறுதியாக நம்ப்படுகிறது.

இந்தக் கூட்டத்தை கூட்டி கருத்துக்களைத் கேட்டறிந்த பாரதப் பிரதமருக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்து கொண்டார்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …