குடும்ப அட்டை தாரர்களை ரேஷன் கடைக்கு வரவழைக்க கூடாது.

வீட்டிலேயே நேரில் சென்று நிவாரண நிதி 1000 ரூபாயை வழங்க வேண்டும்.
தவரும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும-தமிழக அரசு

சென்னை , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தகுதியுடைய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ .1000 / – ரொக்கம் வீட்டிற்கு சென்று விநியோகம் செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன் படி நேற்று முதல் 1000 ரூபாய் பணம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.


கரோனா நிவாரண நிதி ரூ .1000 / -ஐ நியாய விலைக்கடைகளில் வைத்து விநியோகம் செய்யப்படக்கூடாது என்றும் , குடும்ப அட்டைதாரர்களது வீடுகளுக்கே நேரடியாக சென்று விநியோகம் செய்ய வேண்டும் என்றும் , அதனைக் கண்காணிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது .

ஆனால் , நாளிதழ்களில் வரும் செய்திகளின் அடிப்படையிலும் , மண்டலங்களில் அலுவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் போதும் , நியாயவிலைக் கடைகள் மூடப்படாமல் ரூ .1000 / – விநியோகமானது நியாயவிலைக் கடைகளுக்கு , அட்டைதாரர்களை வரவழைத்து மேற்கொள்ளப்படுவதாக புகார்கள் வந்ததை அடுத்து கூட்டுறவுத் துறை இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது ‌.


அரசின் அறிவிப்பின்படி , ரூ .1000 / – கரோனா நிவாரணநிதி தொகையானது குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று மட்டுமே விநியோகம் செய்யப்பட வேண்டும் . இதனைக் கண்காணிக்கத் தவறுகின்ற , சார்நிலைக் கண்காணிப்பு அலுவலர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், நியாயவிலைக் கடைகளைத் திறந்து விநியோகம் செய்யும் நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறது. மேலும் , புகார்கள் ஏதும் வரப்பெறின் , இவற்றைக் கண்காணிக்கத் தவறும் சார்நிலைக் கண்காணிப்பு அலுவலர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …