அத்திக்கடவு – அவிநாசி நீரேற்றும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள்
25.6.2020 (வியாழக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், அம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள், கொரோனா நோய் தடுப்புப் பணிகள் மற்றும்
அத்திக்கடவு – அவிநாசி நீரேற்றும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார்கள். மேலும், அத்திக்கடவு – அவிநாசி நீரேற்றும் திட்டப்பணிகளை நேரில் சென்று கள ஆய்வு செய்ய உள்ளார்.


அதனைத் தொடர்ந்து, 26.6.2020 (வெள்ளிக்கிழமை) அன்று காலை
10 மணிக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், அம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள், கொரோனா நோய் தடுப்புப் பணிகள் மற்றும் முக்கொம்பு கதவணை (BARRAGE) கட்டும் பணிகளை
ஆய்வு செய்ய உள்ளார்கள். மேலும், காவேரி ஆற்றின் குறுக்கே முக்கொம்பில் கட்டப்பட்டு வரும் புதிய கதவணை (BARRAGE) பணிகளை நேரில் சென்று கள ஆய்வு
செய்யவும் உள்ளார்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …