பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கிரேடு முறை அமல்படுத்த திட்டம்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்…

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் எழக்கூடும் என்பதால், இந்த ஆண்டு மட்டும் மதிப்பெண்களுக்கு பதிலாக கிரேடு முறையை அமல்படுத்துவது தொடர்பாக முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் நேரில் சந்தித்து விவாதித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் , இன்று காலை முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்தார். 15 நிமிடம் வரை இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின்போது பள்ளிக்கல்வித்துறை சார்ந்த பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து முதல்வரிடம் தெரிவித்து ஆலோசனை பெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்ட நிலையில், மதிப்பெண்கள் வழங்குவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் எழக்கூடும் என அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே மதிப்பெண்களுக்கு பதிலாக சிபிஎஸ்இ அமைப்பில் இருப்பது போல் ஏ.பி.சி .என கிரேடு முறையை வழங்கலாம் என்பது குறித்தும், இதுதொடர்பாக முதல்வரின் ஆலோசனையை அமைச்சர் பெற்றதாகவும் கூறப்படுகின்றன .
மேலும் வரும் கல்வி ஆண்டில் பல்வேறு மாற்றங்களை செய்வதற்கு பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்தும் முதல்வருடன் விரிவாக அமைச்சர் ஆலோசனை நடத்தியதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல்வருடனான சந்திப்புக்கு பிறகு அமைச்சர் செங்கோட்டையன் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஒட்டுமொத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.

‌ ‌கிரேடு முறை அமல், வரும் கல்வியாண்டில் மேற்கொள்ளவுள்ள புதிய நடவடிக்கைகள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை தற்போது நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …