சென்னையை பொறுத்தவரை ஊரடங்கிற்கு பின்னால் ஒரே பகுதியில் இருந்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது- அமைச்சர் காமராஜ்…

உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரங்கா ரோட்டில் மற்றும் அபிராமபுரம் மூன்றாவது தெருவில் கன்டோன்மென்ட் மண்டலங்களில் சென்று ஆய்வு மேற்கொண்டார் அப்போது

செய்தியாளரிடம் பேசியவர் :-

நேற்று 172 இன்று 105 ஆக காணப்படுகிறது இன்னும் சில நாட்களில் படிப்படியாக குறைந்துவிடும் என நம்புகிறோம்.

எல்லா இடங்களிலும் கபசுர குடிநீர் மற்றும் மாஸ்க் ஆகியவற்றை வழங்கி வருகிறோம்.


தமிழகத்தில் முழு ஊரடங்கு பொதுமக்கள் முடிந்த அளவு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் அனைத்து பொதுமக்களும் அரசு விதிமுறைகளை கடைப்பிடித்து இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் ஆயிரம் ரூபாய் பணம் வீட்டுக்கு வீடு வந்து கொடுக்கப்படும் எனவும் தற்போதும் கொடுத்து வருகிறார்கள் எனவும்,
ஆங்காங்கே வாலியன்டர் மூலம் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டு வருவதாகவும்
போதுமான அளவு உணவு தானியங்கள் கையிருப்பில் இருப்பதாகவும் அத்தியாவசியத் தேவையான அளவு கையிருப்பில் இருப்பதாக
சென்னையை பொறுத்தவரை ஊரடங்கிற்கு பின்னால் ஒரே பகுதியில் இருந்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது.


தேனாம்பேட்டையில் நேற்று 175 ஆக இருந்த எண்ணிக்கை இன்று 105 ஆக உள்ளது.
ஊடங்கு உத்தரவு கொரோனா தொற்றிலிருந்து விடுவித்து கொள்ள பெரிதும் உதவும். மக்கள் ஊரடங்கிற்று முழு ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.


53.33% அளவிற்கு ரூ.1000 பணம் வழங்கப்பட்டுள்ளது.
பொருட்கள் வந்து இறங்கும் நேரத்தில் மக்கள் கடைகளுக்கு செல்லக்கூடாது. களப்பணியாளர்களை கொண்டு வீட்டிற்கே ஆயிரம் ரூபாய் கொண்டு சென்று வழங்கும் பணி நடைபெறுகிறது.
பணம் வழங்குவதில் எந்த விதமான பிரச்சனையும் இல்லை இவர் கூறினார்…

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …