சென்னை மாநகர் முழுவதும் கரோனா நோய்த்தொற்றை முன்கூட்டியே கண்டறிய நடவடிக்கை- சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்.

சென்னை மாநகர் முழுவதும் பரிசோதனையை அதிகரித்து கொரோனா நோய்த்தொற்றை முன்கூட்டியே கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை திரு.வி.க நகரில் அமைந்துள்ள மருத்துவ முகாமை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், முழு அடைப்பு காலத்தை பயன்படுத்தி 30 நிரந்தர சோதனை மையம் மற்றும் 10 நடமாடும் சோதனை மையம் மூலமாக பொதுமக்களின் சோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதன் மூலமாக அதிகமான பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் பொதுமக்கள் முழு அடைப்பை சரியான முறையில் கடைபிடித்து வெளியில் செல்லும்போது முக கவசம் அணிந்து கைகளை அடிக்கடி கழுவி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

பிற மாவட்டங்களில் தீவிர பரிசோதனைக்கு பின்னரே தான் மக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் இ.பாஸ் வழங்குவதும் கூட கட்டுப்படுத்தப்பட்டு, அவசர தேவைக்கேற்ப வழங்கப்பட்டு வருகிறது என்ற அவர், மக்கள் அனைவரும் அரசு மேற்கொண்டு உள்ள பரிசோதனை மையங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கூறினார்.

அதேபோல் தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் முறைகேடுகளை கண்டறிய அஜய் யாதவ் ஐஏஎஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், கொரோனா நோய் தொற்று காரணமாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் அதிகமான கட்டணம் வசூலிக்கப்படும் மருத்துவமனைகள் மீது புகார் அளிக்க 104 எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் அந்த புகார் மீது ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான குழு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். குற்றச்சாட்டுக்கு உள்ளான தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி நோய் தொற்று அதிகரிக்காமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும், சென்னை மட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனையை அதிகரிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்தார்.

(பேட்டி: ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர்…)

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …