கரோனா ஊரடங்கு காலத்தில் கல்விக் கட்டணம் கட்டாயமாக வசூலிக்கக்கூடாது- மாவட்ட க் கல்வி இயக்ககம்.

சி . மாதேஸ்வரன் , மாவட்டக் கல்வி அலுவலர், ஆத்தூர், அனைத்து மெட்ரிக் பள்ளிகளுக்கு சுற்றிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் கரோனா ஊரடங்கு காலத்தில் கல்விக் கட்டணம் கட்டாயமாக வசூலிக்கக்கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது .

இந்நிலையில் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகளில் இணைய வழி வகுப்புகள் நடத்துவதற்கான கல்வி கட்டணம் செலுத்த பெற்றோர்களை நிர்பந்தப்படுத்துவதாக புகார் மனு பெறப்பட்டுள்ளதாகவும் , 2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான நிலுவைக்கட்டணம் மற்றும் 2020- 2021 ஆம் ஆண்டிற்கான கல்வி கட்டணம் ஆகியவற்றை செலுத்த பெற்றோர்களை நிர்பந்தம் செய்யக்கூடாது என திட்ட வட்டமாக தெரிவிக்குமாறும் , அரசாணையினை மீறி கல்விக் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் தனியார் பள்ளிகள் மீது விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேற்காண் பொருள் குறித்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் முதல்வர் / தாளாளர்களுக்கு திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்வதோடு , பள்ளிகளில் கட்டாயமாக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்பதற்கான , இத்துடன் இணைக்கப்பட்டுள்ள உறுதிமொழிச்சான்றினை 23.06.2020 பிற்பகல் 03.00 மணிக்குள் நேரில் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது . பள்ளிகளில் கட்டாயமாக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படும் விவரம் தெரிய வந்தால் அப்பள்ளிகளின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் எனவும் , இதுசார்ந்து எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுமாறும் , அனைத்து தனியார் / சுயநிதி / மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலை / பள்ளித் தாளாளர்கள் / முதல்வர்கள் / தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .

மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து
தனியார் பள்ளி சங்கத்தின் பொதுச் செயலாளர் நந்தகுமார் தனியார் பள்ளிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்…

சேலம் மாவட்டத்திலிருந்து முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளுக்கும் மெயில் ஒன்றை அனுப்பி இருக்கிறார் ,அதில் 2019.
-20, 2020- 21 ஆம் ஆண்டுக்கான பழைய புதிய கல்விக் கட்டணத்தை கேட்கமாட்டோம்.

ஆன்லைன் வகுப்புகள் நடத்தினாலும் அதற்கும் எந்த கட்டணமும் கேட்க மாட்டோம் என்று உறுதி கூறுகிறோம் என்கிற அடிப்படையில் உறுதிமொழி கடிதம் எழுதி வாங்குகிறார்கள். பள்ளி நிர்வாகிகள் கல்வி கட்டணம் வசூலித்தால் அவர்கள் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்ற மிரட்டலுடன் பள்ளி நிர்வாகிகள் யாரும் அவசரப்பட்டு எழுதிக் கொடுக்க வேண்டாம்.

இது சம்பந்தமான பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அரசுடனும் இயக்குனர்களுடன் நமது மாநில சங்கம் பல்வேறு கோரிக்கை மனுக்களை வைத்து பேசிக் கொண்டிருக்கிறோம்.

எனவே மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலர்கள் மிரட்டி உங்களிடம் எழுதி வாங்கினால் நீங்கள் எழுதித் தந்தால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பாவீர்கள்.


அதேபோல் காலாண்டு அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை கூட தர வேண்டாம் என்று அரசு அறிவித்த பின்னரும் சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட கல்வி அலுவலர்கள் விடைத்தாள்களை கேட்பதாக தகவல்கள் வருகிறது என்று யாரேனும் கேட்டால் விடைத்தாள்களை கொடுக்காமல் பெற்றோர்களிடம் கொடுத்து விட்டோம். இனி திரும்ப பெற முடியாது எனச் சொல்லி மார்க்ஸ் கார்டு
மார்க் ரிஜிஸ்டர் மட்டும் கொடுத்து உங்கள் மாணவர்கள் மதிப்பெண்களைப் பெற்று ஆல் பாஸ் மதிப்பெண் பட்டியலைப் பெற்றுகொள்ளுங்கள்.

பள்ளி எப்போது திறக்கும் மாணவர் சேர்க்கை எப்போது செய்வோம் புதிய பழைய கல்வி கட்டணம் எப்போது வசூல் செய்வோம் எப்போதும் தேர்வு எவ்வளவு பாடங்கள் குறைப்பார்கள் என்று தெரியாத நிலையில் இப்பொழுது விற்கும் தமிழ்நாடு பாடநூல் நிறுவன புத்தகங்கள் செல்லுமா செல்லாதா என்று தெரியாத நிலையில் முதல் பருவ பாட புத்தகங்களை வாங்கிக் கொள்ளுங்கள்என்று சொல்லி வற்புறுத்துகிறார்கள்.

புத்தகங்களை வாங்கி ஏமாற வேண்டாம் எப்படி வாங்குவீர்கள் பணம் எங்கு இருக்கிறது.


மாணவரே இல்லாத பள்ளியில் யாருக்கு கொடுப்பீர்கள் என்பதை புரிந்து கொண்டுபுதிய பாட புத்தகங்களை யாரும் வாங்கக் கூடாது என்று நமது சங்கத்தின் சார்பில் முடிவெடுத்திருக்
கிறோம் என்பதை அனைவர் கவனத்திற்கும் கொண்டு வருகின்றோம் . பள்ளி நிர்வாகிகள் பார்த்து புரிந்து நடந்து கொள்ளுங்கள்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …