தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்க முடிவு?


தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்க ஆட்சியர் கூட்டத்தில் முடிவு எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் , தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் , நிவாரணப் பணிகளை தீவிரமாக மேற்கொள்வது குறித்தும் , பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆய்வு செய்தார்.

கரோனா பரவலை தடுக்க மாவட்ட எல்லைகளை மூடவும் ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆட்சியர்கள், தங்களது மாவட்டங்களில் கரோனா பரவலை தடுக்க தளர்வுகளை கடுமையாக்கும் முடிவுகளை எடுக்க அனுமதி எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மண்டலங்களுக்குள் அரசுப் பேருந்துகளை இயக்குவதை நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அந்தந்த மாவட்டங்களுக்குள் மட்டும் பேருந்து இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தக் கூட்டத்தில் , துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , நகராட்சி நிர்வாகம் , ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் திரு.எஸ்.பி. வேலுமணி , மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி . விஜயபாஸ்கர் , வருவாய் , பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் திரு . ஆர்.பி. உதயகுமார் , தலைமைச் செயலாளர் திரு.க. சண்முகம் , இ.ஆ.ப. , காவல்துறை தலைமை இயக்குநர் திரு . J.K. திரிபாதி , இ.கா.ப. , மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் .

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …