மாணவர்களின் நலன் கருதி வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் வகையில் புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது


மாணவர்கள் வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் வகையில் புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
e-learn.tnschools.gov.in என்ற இணையதளத்தினை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.

1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையில் ஒவ்வொரு பாடத்திற்கும் பாடத்தில் உள்ள தலைப்பு வாரியாக பாடங்களுக்கான 3முதல் 4நிமிடம் வரையில் குறுகிய காணொலிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது ..1ம் வகுப்பு முதல்.12ம் வகுப்பு வரை உள்ள 25பாடங்களுக்கும் அந்த பாடங்களில் உள்ள ஒவ்வொரு பாடத்தலைப்புக்கும் ஏற்ப காணொலி இடம்பெற்றுள்ளது

மேலும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான தமிழ், ஆங்கில வழியில் அந்தந்த பிரிவுகளுக்கேற்ப பாடங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது..

ஆன்-லைன் வழிக் முறையினை ஒழுங்குபடுத்த கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

மேலும் ஆன்-லைன் வழிக் கல்வியைத் தவிர தற்போதைய சூழலில் வேறு வழியில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார் .இதன் மூலம் ஆன்-லைன் வழிக் கல்வி முறைக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை முக்கியத்துவம் அளிக்கும் என்று கருதப்படுகின்றது.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …