கலா-அசாரில் மருந்துத் தடுப்புக்கு எதிர்த்துப் போராட புதிய உயிர் அணுக்கள் கண்டுபிடிப்பு


இந்தியாவில் பொதுவாக கலா-அசார் என்று அழைக்கப்படும் உள்ளுறுப்புசார் லீஷ்மேனியா ஒட்டுண்ணி நோய்க்கு  சிகிச்சையளிக்கப்படாவிட்டால் 95சதவீததிற்கும் மேற்பட்ட நோயாளிகள் இறப்பை சந்திக்க நேரிடும். இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கக் கிடைக்கும்   ஒரே மருந்து மில்டெபோசின். ஒட்டுண்ணிக்குள் அதன் திரட்சி குறைவு காரணமாக,  இந்த மருந்துக்கு தடுப்பு  உருவாகி  அதன் செயல் திறனை விரைவாக இழக்கச் செய்கிறது.  ஒட்டுண்ணியைக் கொல்ல இந்த மருந்தின் செயல்திறன் அவசியமானது.

மில்டெபோசின் செயல் இழப்பைச் சமாளிப்பதற்கான வழிகளை டாக்டர். ஷைல்சா சிங் தலைமையில் புனேவில் உள்ள பயோடெக்னாலஜி தேசிய செல் அறிவியல் மையத்தின் (DBT-NCCS) ஆராய்ச்சியாளர்கள் குழு ஆராய்ந்து வருகிறது.
 

பாதிப்பை ஏற்படுத்துவதற்குக் காரணமான, ‘லீஸ்மேனியா மேஜர்’ என்றழைக்கப்படும் லீஸ்மேனியாவின் இனங்களில் ஒன்றின் மீது ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்தினர். மருந்தின் வீரியத்தை அதிகரித்து, ஒட்டுண்ணியின் வீரியத்தைக் குறைக்கும் வகையில், அவர்கள் லீஸ்மேனியா இனங்களின் கடத்தல் புரதங்களைக் கையாள முயற்சித்தனர்.

கணக்கீட்டு ரீதியாக வடிவமைக்கப்பட்ட செயற்கைப் புரதங்களைப் பயன்படுத்தி, லீஸ்மேனியாவின் கடத்தல் புரதங்களின் மூலக்கூறு இணைப்புப்  பண்பேற்றத்தை இந்தக் குழு முதன் முதலில் காட்டியது. இவர்களின் கண்டுபிடிப்புகள், ‘பயோகெமிக்கல் இதழில்’ வெளியிடப்பட்டுள்ளன.

லீஷ்மேனியா ஒட்டுண்ணிகளின் மருந்துத் தடுப்புக்கு எதிராக புதிய சிகிச்சை முறைகளை உருவாக்க, இந்த அணுகுமுறை, நீண்ட காலத்திற்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதை, இந்த நம்பிக்கைக்குரிய ஆராய்ச்சி முடிவுகள் குறிப்பிடுகின்றன.

NEW BIOMOLECULES TO FIGHT DRUG RESISTANCE IN KALA- AZAR
–By Sunderarajan Padmanabhan

Leishmaniasis is a neglected tropical disease affecting almost 100 countries including India. It is caused by a parasite called Leishmania, which is transmitted through the bite of sand flies.

There are three main forms of leishmaniasis – visceral, which affects multiple organs and is the most serious form of the disease, cutaneous, which causes skin sores and is the most common form); and mucocutaneous, which causes skin and mucosal lesion).

Visceral leishmaniasis, which is commonly known as Kala-azar in India, is fatal in over 95% of the cases, if left untreated. The only drug available against leishmaniasis, miltefosine, is rapidly losing its effectiveness because of emerging resistance to this drug due to a decrease in its accumulation inside the parasite, which is necessary for the drug to kill the parasite.

Specific types of protein molecules, called transporter proteins, play a major role in carrying miltefosine into and out of the parasite’s body, which comprises a single cell. A protein called ‘P4ATPase-CDC50’, is responsible for intake of the drug by the parasite, and another protein, called ‘P-glycoprotein’, is responsible for throwing this drug out from within the parasite’s body.

A decrease in the activity of the former protein, and an increase in the activity of the latter results in less amounts of miltefosine being accumulated inside the parasite’s body, thus causing it to become resistant to the drug.

A team of researchers at the Department of Biotechnology’s National Centre for Cell Science (DBT-NCCS) in Pune led by Dr. Shailza Singh has been exploring ways to tackle miltefosine resistance. The researchers worked with one of the species of Leishmania that causes infection, called Leishmania major. They tried to manipulate these transporter proteins in the species in a manner that would result in increased uptake of the drug and decrease in its being thrown out of the parasite’s body.

Scientists need to be extremely careful while seeking to manipulate the transport proteins.  They exist across a diverse range of organisms from bacteria to mammals, including humans and any mishandling could cause more harm than be of use. Consequently, though various researchers have been working over the past two decades to combat drug resistance, their activities were limited to laboratory studies.

Dr. Singh’s research group used computational methods to design small molecules, called peptides, that could very specifically interact with the transporter proteins of L. major alone, and not interfere with human proteins in any way. The peptides were designed to modulate the transporter proteins “allosterically”, i.e. by interacting with the protein molecule at a location other than the specific location where miltefosine binds to it.

This group is the first to have shown allosteric modulation of transporter proteins of Leishmania using computationally-designed synthetic peptides, and their findings were reported in the ‘Biochemical Journal’. These promising research outcomes indicate that this approach could prove useful in the long run to develop novel therapeutics against drug-resistant Leishmania parasites.

[Research article:   https://portlandpress.com/biochemj/article-lookup/doi/10.1042/BCJ20200176

Contact details: Scientist who led this study: Dr. Shailza Singh (singhs@nccs.res.in)

Communication coordinator: Jyoti Rao  (jyoti@nccs.res.in)]

Source: Press Information Bureau – Govt. of India

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …