சமுத்திர சேது திட்டம் – ஐ.என்.எஸ் ஐராவத் கடற்படை கப்பல் மூலம் மாலத்தீவில் இருந்து 198 இந்தியர்கள் இந்தியா வருகைசமுத்திர சேது திட்டத்தின்  கீழ் இயக்கப்பட்ட ஐ.என்.எஸ் ஐராவத் கடற்படைக் கப்பல் மூலம் மாலத்தீவில் இருந்து 198 இந்தியர்கள் ஜூன் 23, 2020 அன்று அதிகாலை தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தனர். இத்துடன் சேர்த்து, இதுவரை இந்தியக் கடற்படை மாலத்தீவில் இருந்து 2386 இந்தியக் குடிமக்களை இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளது

இந்திய நாட்டினரின் பயணத்தை மாலத்தீவில் உள்ள இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்தது. .தேவையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் பணியாளர்கள் கப்பலில் ஏற்றப்பட்டனர். கோவிட் தொடர்பான அனைத்துப் பாதுகாப்பு நெறிமுறைகளும் கடல் பயணத்தின் போது கடைபிடிக்கப்பட்டன.

வெளியேற்றப்பட்டவர்களை தூத்துக்குடியில் உள்ளூர் அதிகாரிகள் வரவேற்றனர். விரைவாக இறங்குதல், சுகாதாரப் பரிசோதனை, குடியேற்றம் மற்றும் வெளியேற்றப்பட்டவர்களின் போக்குவரத்து ஆகியவற்றுக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே  செய்யப்பட்டு தயாராக இருந்தது.

இந்த வெளியேற்றத்தின் மூலம், இந்தியக் கடற்படை 3305 இந்தியர்களை  மாலத்தீவு, இலங்கை மற்றும் ஈரானில் இருந்து மீட்டுக் கொண்டு வந்துள்ளது.

Source: Press Information Bureau – Govt. of India

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …