மூளை வளர்ச்சி குன்றிய மகனை‌ தனிமையில் தவிக்கவிட்டு, தாய்- தந்தையரை அள்ளிச் சென்றது, கரோனா.!


சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், கே. வி. பி. கார்டனில் வசித்து வந்தவர் ஏ. கே. அருணாச்சலம் (வயது 62). இவருடைய மனைவி பெயர் கீதா (வயது 58) இவர்கள் ஒரே மகன் மணி (வயது 26) மூளை வளர்ச்சி குன்றியவர்.


சென்னையில் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கே. வி. பி. கார்டனும் அடங்கும். கடந்த சில வாரங்களாக இப்பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலரான புலவர் அருணாச்சலம் கண் பார்வை குறைபாடுடைய ஒரு மாற்றுத்திறனாளி. ஆனால் தம் அறிவுக் கூர்மையால் நிர்வாக ஆற்றலால் அகில இந்திய பார்வையற்றோர் முற்போக்கு சங்க மாநிலத் தலைவராக(STATE PRESIDENT, ALL INDIA BLIND PROGRESSIVE ASSOCIATION) பணியாற்றி வந்தார்.


இந்த ஊரடங்கு காலத்தில் கூட பார்வையற்றவர்கள் உணவுக்கு தவித்துக்கொண்டிருக்கும் தகவல் கிடைத்தால் தம் வயதைப் பொருட்படுத்தாமல் அங்கு போய் உதவி வந்தார்.
இந்த நிலையில் கரோனா தொற்றுக்கு ஆளானார். இவரைத் தொடர்ந்து இவர் மனைவி கீதா மற்றும் மூளை வளர்ச்சி குன்றிய மகன் மணி ஆகியோரும் தொற்றுக்கு ஆளாயினர்.
மூவரும் அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

சிகிச்சை பலனின்றி மனைவி கீதா நேற்று இரவும், புலவர் அருணாச்சலம் காலையிலும் பலியாயினர்.
மூளை வளர்ச்சி குன்றிய மணி தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
சுயமாக இயங்க இயலாத வாலிப மகனை பெற்றோர் இருவரும் கண்ணை இமை காப்பதுபோல் காப்பாற்றி வந்தனர்.
கொடிய கரோனா இவரை தவிக்கவிட்டு தாய், தந்தையரை அள்ளிச் சென்றுவிட்டது.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …